`மனுதாரர்களிடம் நேரிடையாகவே பேச வேண்டும்; குழு ஆய்வு செய்யும்'- அதிகாரிகளுக்கு தமிழக அரசு அதிரடி `செக்'

`மனுதாரர்களிடம் நேரிடையாகவே பேச வேண்டும்; குழு ஆய்வு செய்யும்'- அதிகாரிகளுக்கு தமிழக அரசு அதிரடி `செக்'

வருவாய்த்துறை அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் பல்வேறு வகையான சான்றுகள் நிராகரிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ள நிலையில் அவற்றைக் கண்காணிக்க உறுதிக்குழுவை நியமனம் செய்து விசாரணை நடத்தத் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், வாரிசு சான்று உள்ளிட்ட பல்வேறு சான்றுகளுக்கு இ-சேவை மையங்களில் விண்ணப்பித்திருந்த மனுக்களின் மீது எவ்வித காரணமும் இன்றி வட்டாட்சியர்கள் நிராகரித்தது ஆய்வில் தெரியவந்தது. தேவையற்ற வகையில் மக்களை அலைக்கழிப்பு செய்யப்படுவதாக பொதுமக்கள் முதல்வரிடம் புகார் செய்தனர். இதைத் தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள், வட்டாட்சியர் அலுவலகங்களில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் வருவாய்த் துறை ஆணையர் சித்திக் இன்று பிறப்பித்துள்ள உத்தரவில், “பொதுமக்களிடமிருந்து பெறப்படும் ஆன்லைன் மனுக்களுக்கு, அதிகாரிகள் அந்த மனுதாரரிடமே போன் செய்து மனுக்களின் நிலையை கேட்டறிய வேண்டும். மனுவை நிராகரிப்பதற்கு முன் அதற்கான காரணத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டவருக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். மேலும் கூடுதல் ஆவணங்கள் தேவைப்படுமாயின் அதை மனுதாரரிடம் தெரிவிக்க வேண்டும். ஆன்லைன் மூலமாகப் பெறப்படும் மனுக்களைத் தர உறுதிப் பிரிவு அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in