பாஜவுக்குள் குழப்பம்... மோடி மீதான மரியாதை குறைந்து விட்டது... அசோக் கெலாட் பேட்டி!

அசோக் கெலாட்
அசோக் கெலாட்

பாரதிய ஜனதா கட்சிக்குள் குழப்பம் நிலவுகிறது. இதனால் பிரதமர் மோடி மீதான மரியாதை அவரது சொந்தக் கட்சிக்குள் குறைந்து விட்டது என்று ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் கூறியுள்ளார்.

இது குறித்துப் பேசிய அசோக் கெலாட், “பிரதமர் மோடியின் கட்சி கொந்தளிப்பில் உள்ளது. பாஜகவில் தகராறு ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி மீதான மரியாதை கட்சிக்குள் குறைந்து விட்டது. கட்சியில் அவருக்கு எதிராக கிளர்ச்சி ஏற்படலாம்” என்று கூறினார்.

நாட்டில் நிலவும் பதற்றம் மற்றும் வன்முறை குறித்து கவலை தெரிவித்த கெலாட், பிரதமர் மோடியால் நாட்டில் உருவாக்கப்பட்ட சூழலால் பதற்றம், வன்முறை ஏற்பட்டுள்ளது. ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என்றார். அமலாக்க இயக்குநரகம், வருமான வரித்துறை, மத்திய புலனாய்வு அமைப்பு போன்ற முக்கிய நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in