`இந்த மூன்றும்தான் எங்கள் விருப்பம்'- எதை சொல்கிறார் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம்

வைத்திலிங்கத்துக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு
வைத்திலிங்கத்துக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு

அதிமுக பொதுக்குழுவில் கொண்டுவரப்பட்ட எந்த தீர்மானமும் செல்லாது என்று ஓபிஎஸ் ஆதரவாளரான துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு பின் இன்று தஞ்சை திரும்பிய வைத்திலிங்கம் தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "சென்னை உயர் நீதிமன்றம் 23 தீர்மானங்களை மட்டும் நிறைவேற்றலாம் வேறு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றக் கூடாது, மற்ற விஷயங்கள் குறித்து விவாதிக்கலாம் என்று தான் சொல்லியிருந்தது. அதை மீறி இணை ஒருங்கிணைப்பாளர் தரப்பினர் செயல்பட்டனர். அப்படி அதை மீறி அவர்கள் கொண்டு வந்த எந்த தீர்மானமும் செல்லாது. அதனால்தான் நாங்கள் சட்டவிரோதமாக நடந்த அந்த பொதுக்குழு செல்லாது என்று சொல்லிவிட்டு வெளியேறினோம்.

ஓபிஎஸ் டெல்லி சென்றிருப்பது குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக கூட்டணி கட்சி என்ற முறையில் சென்றிருக்கிறார். தேர்தல் ஆணையத்தில் முறையிட செல்லவில்லை. எங்கள் தரப்பில் கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும், கூட்டுத் தலைமை வேண்டும், மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்பதுதான் விருப்பம்'' என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in