'அண்ணாவின் அதே உணர்வுடன் இதை முன்மொழிகிறேன்': இந்தி திணிப்புக்கு எதிராக ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றம்!

'அண்ணாவின் அதே உணர்வுடன் இதை முன்மொழிகிறேன்':  இந்தி திணிப்புக்கு எதிராக ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றம்!

தமிழக சட்டப் பேரவையில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தனித் தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்தார்.

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும், அம்மொழிகளைப் பேசும் மாநில மக்களுக்கும் எதிராகக் கொண்டுவரப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கூடாது என முதல்வர் ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்தார். இது குறித்து முதல்வர் பேசுகையில், “அன்னைத் தமிழ் மொழியைக் காத்திட, ஆங்கிலம் அலுவலக மொழியாகத் தொடர்ந்திட அரசியலமைப்புச் சட்டம் இரண்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் அழியாது காத்திட, இந்தி பேசாத மாநில மக்களின் உரிமைகளை நிலை நாட்டிட தமிழ்நாடு மீண்டும் முன்னோடி மாநிலமாக நின்றிடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

அலுவல் மொழி தொடர்பான பாராளுமன்ற குழுத் தலைவர் அவர்களால் கடந்த 09.09.2022 அன்று குடியரசுத் தலைவர் அவர்களிடம் அளிக்கப்பட்ட அறிக்கையில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும், அம்மக்களுக்கு எதிராக அளிக்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப் படுத்தக் கூடாது என மத்திய அரசை இந்தப் பேரவை வலியுறுத்துகிறது. இருமொழிக் கொள்கையை நிறைவேற்றிய அறிஞர் அண்ணா அவர்களின் அதே உணர்வுடன் இந்த தீர்மானத்தை தற்போது முன்மொழிந்துள்ளேன்” என்றார்.

இதைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் துணை தலைவர் ஓபிஎஸ், தமிழ்நாட்டில் எக்காலத்திலும், தமிழை மீறி இந்தியை அனுமதிக்க மாட்டோம். இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்தை முழுமனதாக அதிமுக ஆதரிக்கிறது" என்றார். இதைத் தொடர்ந்து பல்வேறு சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் பேசினர். பாஜக மட்டும் வெளிநடப்பு செய்தது. இதைத் தொடர்ந்து இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in