தருமபுரம் ஆதீனத்துக்கு ஆதரவாக போராட்டம்... அண்ணாமலை திடீர் அறிவிப்பு!

ஆதீனம் வழங்கிய இடத்தில் உள்ள கட்டடம்.
ஆதீனம் வழங்கிய இடத்தில் உள்ள கட்டடம்.

மயிலாடுதுறை நகராட்சிக்கு தருமபுரம் ஆதீனம் வழங்கிய இடத்தை மீண்டும் தங்களிடமே வழங்க வேண்டும் என்று தருமபுரம் ஆதீனம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதற்கு ஆதரவாக அண்ணாமலை உள்ளிட்டோரும், இந்து அமைப்பினரும் ஆதரவாக களமிறங்கியுள்ளனர்.

தருமபுரம் ஆதீனம்
தருமபுரம் ஆதீனம்

மயிலாடுதுறையில், தருமபுரம் ஆதீனம் சார்பாக இலவச மருத்துவமனை அமைக்க, ஆதீனத்துக்குச் சொந்தமான 2 ஏக்கர் இடம்  வழங்கப்பட்டு, 1951 ஜூலை மாதம், அப்போதைய சென்னை மாகாண முதல்வர்  குமாரசாமி ராஜாவால் திறந்து வைக்கப்பட்டது. பல ஆண்டுகளாக, பலருக்கும் இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வந்துள்ளது. 

பின்னர், நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட இந்த மருத்துவமனை, இலவச மகப்பேறு மருத்துவமனையாக செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், மயிலாடுதுறை நகராட்சியின் பராமரிப்பின்மை காரணமாக, மருத்துவமனை கட்டிடம் கடந்த ஐந்து ஆண்டுகளாக செயல்படாமல் இருந்தது.

நகராட்சியும், மருத்துவமனையை புனரமைக்காத சூழலில், கடந்த 2019 அக்டோபர் மாதம், பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி குப்பைகளைத் தரம் பிரிக்க, புதிய நுண்ணுயிர் கிடங்கை இந்த இடத்தில் நகராட்சி நிர்வாகம் கொண்டு வந்தது. தற்போது நுண்ணுயிர் கிடங்கும் செயல்படாமல், குப்பைகள் குவிந்து அப்பகுதியே சுகாதாரச் சீர்கேடாக காணப்படுகிறது.

தருமபுரம் ஆதீனம் சார்பாக, தாங்கள் உருவாக்கிய மருத்துவமனையை, மீண்டும் ஆதீனமே பராமரித்து நடத்த வேண்டும் என நகராட்சிக்கு கடிதம் எழுதப்பட்டது. ஆனால், நகராட்சி சார்பில் அதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது நகராட்சி, அந்தக் கட்டிடத்தை இடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.

தருமபுரம் ஆதீனம்
தருமபுரம் ஆதீனம்

தருமபுரம் ஆதீனம் இடம் தானமாக வழங்கி, பொதுமக்கள் நலனுக்காகத் தொடங்கிய இலவச மருத்துவமனையை மீண்டும் நடத்த விருப்பம் தெரிவிக்கும் நிலையில்  ஆதீனத்திடம் இடத்தை ஒப்படைக்க வேண்டும் என்று பல தரப்பினரும் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். 

அத்துடன் தருமபுரம் ஆதீனம் சார்பில் இடத்தை வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்த விஷயத்தில் அரசுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளார். கோயில் சொத்துக்களையும், ஆதீன சொத்துக்களையும் அத்துமீறி ஆக்கிரமிக்கும் அராஜகத்தை நிறுத்திக்கொண்டு, உடனடியாக, தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான மருத்துவமனையை புனரமைத்து வழங்க வேண்டும்.  

அண்ணாமலை
அண்ணாமலை

மருத்துவமனைக் கட்டிடத்தை இடிக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறோம். இல்லையென்றால், தருமபுரம் ஆதீனத்துக்கு ஆதரவாக, தமிழக பாஜக போராட்டத்தில் ஈடுபடும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதுபோலவே பல்வேறு இந்து அமைப்புகளும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளன. 

இதையும் வாசிக்கலாமே...

கட்டுக்கட்டாக பணம்... அள்ள அள்ள ஆவணங்கள்... திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக ரெய்டு!

சோகம்... காதல் திருமணம் செய்த மகன்... மனமுடைந்த பெற்றோர் தற்கொலை!

கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை! உருக்கமான கடிதம் சிக்கியது!

பகீர் வீடியோ... காதலியின் கண் முன்னே கொலை செய்யப்பட்ட கவிஞர்!

அதிர்ச்சி... பள்ளத்திற்குள் பஸ் கவிழ்ந்து 3 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியான சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in