'ஆஸ்கர் விருதுகளுக்கான கிரெடிட்டையும் மோடிஜி எடுத்துக்கொள்ள கூடாது' - கார்கேவின் பேச்சால் மாநிலங்களவையில் சிரிப்பலை

மல்லிகார்ஜுன கார்கே
மல்லிகார்ஜுன கார்கே'ஆஸ்கர் விருதுகளுக்கான கிரெடிட்டையும் மோடிஜி எடுத்துக்கொள்ள கூடாது' - கார்கேவின் பேச்சால் மாநிலங்களவையில் சிரிப்பலை

காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, இன்று ராஜ்யசபாவில் ஆஸ்கர் விருது பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், இது இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் விஷயம் என்றும் கூறினார். அவர் வெற்றியாளர்களின் தென்னிந்திய தொடர்பையும் சுட்டிக்காட்டினார்.

இந்தியர்கள் வென்ற ஆஸ்கர் விருதுகள் குறித்து மாநிலங்களவையில் பெருமிதம் தெரிவித்த மல்லிகார்ஜுன கார்கே, "நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம், ஆனால் எனது ஒரே வேண்டுகோள் என்னவென்றால், ஆளும் கட்சி இந்த பெருமையையும் எடுத்துக்கொண்டு 'நாங்கள் இயக்கினோம், நாங்கள் எழுதினோம், பிரதமர் மோடிஜி இயக்கினார்' என்று சொல்லக்கூடாது. அதுதான் எனது ஒரே கோரிக்கை" என்று கூறினார்.

கார்கேவின் இந்த கருத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பிலும் சிரிப்பலை ஏற்படுத்தியது. ராஜ்யசபா தலைவரும், துணைத் தலைவருமான ஜக்தீப் தங்கார் மற்றும் அவைத் தலைவர் பியூஷ் கோயலும் இது குறித்து சிரித்துக் கொண்டிருந்தனர். வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் ஆகியோரும் சிரித்துக் கொண்டிருந்தனர்.

பியூஸ் கோயல் நேற்று "ராஜ்யசபா பரிந்துரைகள் - பிரதமர் அலுவலகத்திற்கான ஆஸ்கர்" என்ற தலைப்பில் ஒரு பதிவினை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். அதில் அவர் மதிப்புமிக்க விருதுக்கும், பிரதமரின் ராஜ்யசபாவிற்கு பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் இடையே உள்ள ஒற்றுமையை குறிப்பிட்டார். அந்தப் பதிவில், 2022 ல் மேல்-சபைக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களில் 'ஆர்ஆர்ஆர்' திரைக்கதை எழுத்தாளர் வி விஜயேந்திர பிரசாத் ஒருவர் என்று அமைச்சர் கூறினார். 'விஜயேந்திர பிரசாத்தின் படைப்புகள் இந்தியாவின் புகழ்பெற்ற கலாச்சாரத்தை வெளிப்படுத்தி, உலகளவில் முத்திரை பதித்துள்ளன. தற்போது 'நாட்டு நாட்டு' சிறந்த பாடலுக்காக ஆஸ்கர் விருதை வென்றது. இது பிரதமரின் விருப்பத்திற்கு உலகளாவிய அங்கீகாரம்," என்று பியூஸ் கோயல் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in