சனாதனம் குறித்து மீண்டும் பேசினால் ஆட்சியை கலைக்க பாடுபடுவேன்! சுப்பிரமணியன் சுவாமி ஆவேசம்!

சுப்பிரமணியன் சுவாமி
சுப்பிரமணியன் சுவாமி

’’தற்கொலை செய்யும் நிலையில் திமுக உள்ளதா? சனாதன தர்மத்தின் மீதான தாக்குதல் முட்டாள் தனமானது. சனாதன தர்மம் குறித்து மீண்டும் பேசினால் ஆட்சியைக் கலைக்கப் பாடுபடுவேன்’’ என சுப்பிரமணியன் சுவாமி திமுகவிற்கு எச்சரிக்கை விடும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

டெங்கு, மலேரியா போன்று சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி பேசியது இந்திய அளவில் சர்ச்சையாகி உள்ளது. என்ன வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த பாஜக, உதயநிதியின் பேச்சை வைத்து இந்தியா கூட்டணியில் கல் வீசியுள்ளது.

உதயநிதியின் பேச்சுக்கு அமித்ஷா, நட்டா உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அதிரடி கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், ‘’அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளேன். சனாதன தர்மம் குறித்து திமுகவினர் மீண்டும் பேசினால் ஆட்சியைக் கலைக்க பாடுபடுவேன். என்னால் ஆட்சியை கலைக்க முடியும் என்பதை 1991ல் நிரூபித்துள்ளேன். இந்தியா ஒரு கூட்டமைப்பு என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்’’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in