’சிறுபிள்ளைத்தனம்’ தவறான வார்த்தை நீக்குங்கள் - பேரவையில் கொந்தளித்த நயினார் நாகேந்திரன்!

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

தமிழக ஆளுநர் ரவி சிறுபிள்ளைத் தனமாக செயல்பட்டு வருகிறார் என சிபிஐ எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் பேசியதற்கு, பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதனை ராமச்சந்திரன் திரும்பப் பெற்றார்.

அவை முன்னவர் துரைமுருகன்
அவை முன்னவர் துரைமுருகன்

தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய 10 சட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவதற்கான தனித்தீர்மானத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது பேசிய சிபிஎம் எம்.எல்.ஏ ராமச்சந்திரன், ‘’மக்களால் தேர்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நிறைந்த இந்த அவையால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது சிறுபிள்ளைத்தனமானது எனக் கூறினார்.

சட்டப்பேரவை கூட்டம்
சட்டப்பேரவை கூட்டம்

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாஜக சட்டமன்றக்குழு தலைவர் நயினார் நாகேந்திரன், எங்களது தென்பகுதியில் சிறுபிள்ளைத்தனம் என்பது தவறான வார்த்தை என கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவை முன்னவர் அமைச்சர் துரைமுருகன், சிறுபிள்ளை என்பது தவறான வார்த்தை அல்ல என தெரிவித்தார். இருந்த போதிலும் சிபிஎம் எம்.எல்.ஏ ராமச்சந்திரன் தனது அந்த வார்த்தையை திரும்ப பெறுகிறேன் என அவர் தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

HBD Nayanthara | சின்னத்திரை தொகுப்பாளர் டூ லேடி சூப்பர் ஸ்டார்! டயானா... நயன்தாராவாக மாறிய கதை!

சோகம்… பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவனின் கால்கள் அகற்றம்!

அதிர்ச்சி… 28 வயது மருத்துவர் மாரடைப்பால் உயிரிழப்பு!

இன்று தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு முகாம்... கையோட ஆதார் எடுத்துட்டு போங்க!

குட்நியூஸ்... எஸ்பிஐ வங்கியில் 8,283 காலிப்பணியிடங்கள்; உடனே விண்ணப்பியுங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in