அமைச்சர் பிடிஆர் பெயர் நீக்கம் - திமுக தலைமை எடுத்த அதிரடி முடிவு!

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்அமைச்சர் பிடிஆர் பெயர் நீக்கம் - திமுக தலைமை எடுத்த அதிரடி முடிவு!

திமுக அரசின் இரண்டு ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக அறிவிக்கப்பட்ட தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் பெயர் திடீரென நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளது. இந்த இரு ஆண்டு சாதனைகளை மக்களுக்கு விளக்கும் வகையில் சாதனை விளக்க பொதுக்கூட்டங்களை மாநிலம் முழுவதும் திமுக நடத்தி வருகிறது. அதன்படி மதுரையின் சிம்மக்கல் பகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் பிடிஆர் சிறப்பு பேச்சாளராக பங்கேற்பார் என திமுகவின் அதிகாரப்பூர்வ இதழான முரசொலியில் கடந்த 3ம் தேதி அறிவிப்பு வெளியானது.

ஆனால் நேற்று மாலையில் சிம்மக்கல் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் தொடர்பான போஸ்டர்களில் அமைச்சர் பிடிஆரின் பெயர் நீக்கப்பட்டு, ஏ.ஜெயரஞ்சன் பெயர் சிறப்பு பேச்சாளராக இடம்பெற்றது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பிடிஆர் பங்கேற்கவில்லை.

திமுக தலைவர் ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர்கள் குறித்து அமைச்சர் பிடிஆர் பேசியதாக சொல்லப்பட்ட ஆடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை உருவாக்கியது. ஆனால், அது தன்னுடைய ஆடியோ இல்லையென பிடிஆர் விளக்கமளித்திருந்தார். ஆனாலும் தற்போது அவரின் பெயர் சிறப்பு பேச்சாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in