அனுமதியின்றி பாரத மாதா சிலை!பாஜக அலுவலகத்தில் பரபரப்பு!

அனுமதியின்றி பாரத மாதா சிலை!பாஜக அலுவலகத்தில் பரபரப்பு!

விருதுநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் இருந்த பாரத மாதா சிலையை காவல்துறையினர் அகற்றியதால் பரபரப்பு நிலவியது.

`என் மண் என் மக்கள்' என்ற பெயரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். ஒவ்வொரு ஊர்களிலும் பயணத்தை முடிக்கும் அண்ணாமலை, அன்றைய இரவில் பொதுக்கூட்டத்தில் பேசி வருகிறார் அண்ணாமலையை வரவேற்று சாலைகளில் கொடி தோரணங்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், விருதுநகர் மாவட்ட பாஜக அலுவலக வளாகத்தில் பாரத மாதா சிலை திடீரென வைக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அனுமதியின்றி சிலை வைக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, இரவோடு இரவாக வருவாய்த்துறையினர் பாரத மாதா சிலையை அகற்றினர். இந்த சிலையை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருவாய்த்துறையினர் கொண்டு சென்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in