பிரஜ்வல் ரேவண்ணாவால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம்... கர்நாடக அரசு அதிரடி அறிவிப்பு!

கர்நாடக அரசு
கர்நாடக அரசு

மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் எம்.பியான  பிரஜ்வல் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்படும் என்று கர்நாடக மாநில அரசு அறிவித்துள்ளது.

சித்தராமையா
சித்தராமையா

கர்நாடகத்தில்  மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த எம்.பியும், தேவேகவுடாவின் பேரனுமாகிய  பிரஜ்வல் ரேவண்ணா  300-க்கும் அதிகமான பெண்களை நாசமாக்கி 3,000-க்கும் அதிகமான வீடியோக்கள் பதிவு செய்து வைத்திருப்பதாக கிளம்பியுள்ள விவகாரம் அம்மாநிலத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. 

பிரஜ்வல் ரேவண்ணா, நாட்டைவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டார். அவரைப் பிடிக்க ப்ளூ கார்னர் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.  ஜெர்மனியில் உள்ள அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்,  ரேவண்ணா வீட்டின் பணிப்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் பிரஜ்வலின் தந்தையும், தேவகவுடாவின் மகனுமான எச்.டி.ரேவண்ணா கைது செய்யப்பட்டார்.

பிரஜ்வல்
பிரஜ்வல்

இது கர்நாடகாவில் பாஜக கூட்டணிக்கு பெரும் நெருக்கடியை கொடுத்திருக்கிறது. இதனை அங்கு ஆளும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்படும் என காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளருமான ரந்தீப் சிங் சுர்ஜ்வாலா இன்று மாநில முதல்வர் சித்தராமையாவுடன் இணைந்து  செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இது குறித்து அவர் தெரிவித்தார், "இது கடந்த 75 ஆண்டுகளில் நடந்த மிக மோசமான சம்பவமாகும். நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் அனைவருக்கும் முதல்வர் சித்தராமையா நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் அமித்ஷாவும் அவர்களின் கூட்டணி வேட்பாளரான பாலியல் குற்றவாளி பிரஜ்வால் ரேவண்ணாவைப் பாதுகாக்க நினைக்கின்றனர். இல்லையெனில் பாலியல் குற்றச்சாட்டுகள் இருப்பது தெரிந்தே அவர்களுடன் கூட்டணி வைத்திருப்பார்களா? மேலும், ப்ளு கார்னர் நோட்டீஸ் கொடுக்கப்பட்ட பின்னும் இண்டர்போல் மூலம் அவரை கைது செய்யாமல் இருப்பது ஏன்?" என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in