சந்திரபாபு நாயுடுவுக்கு 4 வார இடைக்கால ஜாமீன்... தெலுங்கு தேசம் கட்சியினர் உற்சாகம்!

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு மருத்துவக் காரணங்களுக்காக 4 வார இடைக்கால ஜாமீன் வழங்கி ஆந்திரா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆந்திரா மாநிலத்தில் கடந்த 2014-19-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் இருந்தபோது, இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காக திறன் மேம்பாட்டு கழகம் என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இதில் கல்லூரி மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், சீமென்ஸ் நிறுவனத்திற்கு 371 கோடி ரூபாய் நிதி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதில் 118 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த மாதம் 9-ம் தேதி முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை தற்போது ஆட்சியில் இருக்கும் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி கைது செய்து சிறையில் அடைத்திருந்தது.

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

ராஜமுந்திரி சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ள சந்திரபாபு நாயுடு ஜாமீன் கோரி லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்திருந்தார்.

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, மருத்துவ காரணங்களுக்காக சந்திரபாபு நாயுடுவுக்கு 4 வார கால இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு தெலுங்கு தேசம் கட்சியினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... திமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி கொலை!

பகீர்... 81 கோடி இந்தியர்களின் ஆதார் தரவுகள் விற்பனை...  சிபிஐ விசாரணை!

இன்றே கடைசி தேதி... 2250 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

மைதானத்தில் வீராங்கனைக்கு முத்தமிட்ட விவகாரம்... லூயிஸுக்கு 3 ஆண்டுகள் தடை!

பரபரப்பு… பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in