தேவேந்திர குல வேளாளர்களுக்கு தனி இட ஒதுக்கீடு... பாமக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்!

பிரதமருடன் பாமக தலைவர் அன்புமணி, சௌமியா அன்புமணி
பிரதமருடன் பாமக தலைவர் அன்புமணி, சௌமியா அன்புமணி

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாமகவின் சார்பில் அதன் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.

ராமதாஸ், அன்புமணி ராமதாஸ்
ராமதாஸ், அன்புமணி ராமதாஸ்

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டவர்கள் பாமக வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ஒவ்வொரு தேர்தலுக்கும் பாமக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படுவது வழக்கம். அதில் நாட்டிற்கு தேவையான பல்வேறு முக்கியமான நலத்திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இடம் பெறும். அதன்படி இந்த மக்களவைத் தேர்தலுக்கான பாமகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.

கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று சென்னை தி.நகரில் உள்ள பாமக அலுவலகத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் . பாமக தலைவர் அன்புமணி முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

பிரதமருடன் பாமக தலைவர்கள்
பிரதமருடன் பாமக தலைவர்கள்

’இட ஒதுக்கீட்டில் கிரிமிலேயர் நீக்கப்படும்.  நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். அனைத்து சாதியினருக்கும் அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்கப்படும். தனியார் துறை மற்றும்  நீதித்துறையிலும் இட ஒதுக்கீடு கொண்டு வரப்படும். மத்திய அரசில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை என்ற புதிய அமைச்சகம் உருவாக்கப்படும். தேவேந்திர குல வேளாளர்களை தனி பிரிவாக அறிவித்து இட ஒதுக்கீடு வழங்கப்படும்’ உள்ளிட்ட வாக்குறுதிகளை பாமகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

மேலும், தமிழ்நாட்டில் மாநில தன்னாட்சி,  நீர் மேலாண்மை,  இளைஞர் நலன், இளைஞர் வேலை வாய்ப்பு, மகளிர் நலன்,  வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்த வாக்குறுதிகள் பாமக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

இதையும் வாசிக்கலாமே...


இன்றே கடைசி... இதுவரை 751 பேர் வேட்புமனு தாக்கல்: சுயேட்சை வேட்பாளர்கள் அதிக ஆர்வம்!

தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு... ஓபிஎஸ் வாக்குறுதி!

பெங்களூரு ஓட்டல் குண்டு வெடிப்பு குற்றவாளிகள் தமிழகத்தில் பதுங்கலா?... 5 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை!

வெயிலுக்கு இதம் தரும் ஜில் தகவல்... தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 2.80 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு... எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in