தேர்தல் அறிக்கையை அடுத்து பிரச்சாரப் பாடலும் வெளியீடு... கலக்கும் காங்கிரஸ்!

பிரச்சாரப்பாடல் வெளியீட்டு நிகழ்வு
பிரச்சாரப்பாடல் வெளியீட்டு நிகழ்வு

மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மிகுந்த வரவேற்பு பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக தேர்தல் பிரச்சாரப் பாடலையும் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. 

கார்கே, ராகுல்
கார்கே, ராகுல்

மக்களவைத் தேர்தலைச் சந்திக்க காங்கிரஸ் கட்சி இந்தமுறை  எல்லா வகையிலும்  முன்கூட்டியே திட்டமிட்டு தயாராகி உள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன்பாகவே இந்தியா முழுவதும் உள்ள முக்கிய எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது.  கடந்த மூன்று மாதத்திற்கு முன்பாகவே ஒவ்வொரு மாநிலத்திலும் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டது.

அனைத்தும் சுமூகமாக முடிந்த நிலையில் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.  இந்த தேர்தல் அறிக்கையில் இந்திய அளவில் மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ள.  இது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

இந்த நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரப் பாடலை யும் காங்கிரஸ் நேற்று வெளியிட்டது.  பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோருக்கான நீதி என்ற கருப்பொருளின் அடிப்படையில் இந்த பிரச்சாரப் பாடல் அமைந்துள்ளது.

டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேட் ஆகியோர் பிரச்சார பாடலை  வெளியிட்டனர். அப்போது பேசிய ஜெய்ராம் ரமேஷ், "தேர்தல் அறிக்கையை போலவே இதுவும் அனைத்துத் தரப்பு மக்களிடமும் சீக்கிரம் சென்று சேரும், வரவேற்பும் பெறும்.

தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகள் அடங்கிய உத்தரவாத அட்டைகளை 8 கோடி வீடுகளில் வழங்கும் பணியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. சுமார் 80 சதவீத அட்டைகளை முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் தொகுதிகளில் விநியோகித்துள்ளோம்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in