சங்கரய்யாவுக்கான கெளரவ டாக்டர் பட்டம் - ஆளுநர் நிராகரித்தது ஏன்?

தியாகி சங்கரய்யா
தியாகி சங்கரய்யா

சுதந்திர போராட்டத்தில் சங்கரய்யா பங்கேற்றதற்கான தரவுகள் இல்லாததாலேயே அவருக்கான கெளரவ டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் கையெழுத்திடவில்லை என ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலைப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான என்.சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க மதுரை காமராசர் பல்கலைக்கழகம் முடிவு செய்திருக்கிறது. ஆனால், அதற்கான கோப்பில் கையெழுத்திட ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்துவிட்டார். இதற்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், ஆளுநர் இதுதொடர்பான கோப்பில் கையெழுத்திடவில்லை என்ற காரணம் வெளியாகியுள்ளது. அதில், ராஜ்பவனில் சுதந்திர போராட்ட தியாகிகள் கெளரவிக்கப்பட்ட நிலையில், சங்கரய்யா பெயரளவுக்கு மட்டுமே விடுதலை போராட்டத்தில் பங்கேற்றதாக கூறப்பட்டதாலேயே ஆளுநர் அவருக்கான கெளரவ டாக்டர் பட்ட கோப்பில் கையெழுத்திடவில்லை என கூறப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in