‘அரசியலமைப்பை காக்க மோடியை கொல்ல வேண்டும்..’

புது சர்ச்சையில் காங்கிரஸ்
‘அரசியலமைப்பை காக்க மோடியை கொல்ல வேண்டும்..’

’அரசியலமைப்பு சட்டத்தைக் காப்பாற்ற மோடியை கொல்லத் தயாராவோம்’ என்று பேசிய மத்திய பிரதேச மாநில முன்னாள் அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மபி மாநிலத்தின் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்தவர் ராஜா பதேரியா. காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் இவர் பேசும் வீடியோ ஒன்று பெரும் சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறது. அதில், “தேர்தல் நடைமுறையை மோடி முடிவுக்கு கொண்டு வந்து விடுவார். சாதி, மதம், மொழி அடிப்படையிலான பிரிவினைக்க்கு வித்திடுவார். தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர் வாழ்க்கை மிகவும் அபாயத்தில் உள்ளது. எனவே, அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற மோடியை கொல்லத் தயாராவோம்” என்று அவர் பேசியுள்ளார்.

வீடியோ பொதுவெளியில் சர்ச்சைக்கு ஆளானதுமே, தன்னிலை விளக்கமாக உடனடி வீடியோ ஒன்றை பதாரியா வெளியிட்டார். அதில் “மோடியை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்ற பொருளிலேயே அவ்வாறு பேசினேன். மகாத்மா காந்தியின் சித்தாந்தப்படியும், அஹிம்சையின் வழியிலும் அரசியல் செய்து வருகிறேன்” என்று விளக்கம் தந்துள்ளார்.

உடனடியாக பற்றிக்கொண்ட பாஜக முகாம், பதேரியாவை விட்டு ராகுல் காந்தியையும், காங்கிரஸ் கட்சியையும் உலுக்கியெடுத்து வருகிறது. மபி முதல்வரான சிவராஜ் சிங் சவுகான், “மோடியை தேர்தலில் எதிர்கொள்ள முடியாத காங்கிரஸ் கட்சி வெறுப்பு மற்றும் பொறாமையில் தவிக்கிறது. ராகுல் காந்தி நடத்தும் பாதயாத்திரையின் சுயரூபம் வெளிப்பட்டிருக்கிறது” என்று தாக்கியிருக்கிறார்.

பதேரிக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டிருக்கும் மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, ”இது காந்தியின் வழிவந்த காங்கிரஸ் அல்ல. முசோலியின் வழிவந்த இத்தாலி காங்கிரஸ்” என்று சாடியுள்ளார். பதேரியாவுக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை கைது செய்யவும் மபி போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in