தமிழக மாடலா, திராவிட மாடலா என விவாதிக்க ரெடி: அமைச்சர் பொன்முடிக்கு அண்ணாமலை பதில்

தமிழக மாடலா, திராவிட மாடலா என விவாதிக்க  ரெடி: அமைச்சர் பொன்முடிக்கு அண்ணாமலை  பதில்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கூட்டேரிப்பட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு மத்திய அரசு நலத்திட்ட பிரிவு சார்பில் இரண்டு நாள் கண்காட்சி நிகழ்ச்சியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று தொடங்கி வைத்தார்.

இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், " தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசு குறித்து தெரிவித்த கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்து. அமைச்சர் பொன்முடி தமிழக வரலாறு குறித்து விவாதிக்க தயாரா என்று கேட்டுள்ளார். அவர் கட்சியின் தலைவர் அல்ல. அவர் அமைச்சர் மட்டுமே. திராவிட மாடலா, தமிழக மாடலா என விவாதிக்க தயாராக இருக்கிறோம். இடத்தை நேரத்தையும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தால் எங்கள் கட்சியிலிருந்து துணைத் தலைவர் ஒருவர் அவருடன் நேரலையில் விவாதிக்க தயார். கடந்த 13 மாத திமுக ஆட்சியின் ஊழல்களையும் விவாதிக்க தயார்" என்று அண்ணாமலை தெரிவித்தார்.

மேலும் " தமிழகத்தில் ஆங்காங்கே பாஜக அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகள் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தில் பாஜக நிர்வாகிகளை அமைதி காக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளோம் " என்றார். அப்போது, மாநிலத்துணைத்தலைவர் ஏஜி சம்பத், மாவட்டத்தலைவர் ராஜேந்திரன், மாவட்ட பொறுப்பாளர் மீனாட்சி. முன்னாள் மாவட்டத்தலைவர் கலிவரதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in