ரத்து செய்யப்பட்ட 3 மருத்துவக் கல்லூரிகளுக்கு மீண்டும் அங்கீகாரம்: அமைச்சர் தகவல்!

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்ரத்து செய்யப்பட்ட 3 மருத்துவக் கல்லூரிகளுக்கு மீண்டும் அங்கீகாரம்: அமைச்சர் தகவல்!

அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட சென்னை ஸ்டான்லி உள்ளிட்ட 3 அரசு மருத்துவக்கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தை தேசிய மருத்துவ ஆணையம் திரும்பப் பெற்றுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், ‘’ பொதுவான கலந்தாய்வு என்பது மாநில அரசின் உரிமைகளைத் தடுக்கும் என்பதால் அந்த நடவடிக்கையை கைவிட வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தினோம் அதனை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. தமிழக முதல்வரின் துரித நடவடிக்கையால் மாநில அரசின் உரிமைகள் இன்றைக்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மருத்துவத்துறைக்கு மாநில உரிமைகள் மீதான பாதிப்பில் இருந்து ஒரு விடிவுக் கிடைத்திருக்கிறது.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள ஓரிரு சிறு குறைகளும் சரி செய்யப்பட்டு அறிக்கை வழங்கப்பட்டது; தேசிய மருத்துவ ஆணையக் குழுவினர் நேற்று கல்லூரிகளுக்கு நேரடியாக வந்து ஆய்வு செய்தனர். தற்போது சென்னை ஸ்டான்லி மற்றும் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரிகளுக்கான அங்கீகார ரத்து சான்று திரும்பப் பெறப்பட்டு அடுத்த 5 ஆண்டுகளுக்கு தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரி அங்கீகாரம் ரத்து என்பதை வைத்து ஓரிரு நாள் அரசியல் செய்தவர்களுக்கும் தெரிவித்துக் கொள்வது ஒன்றுதான். வழக்கமான வாடிக்கையான ஒன்றுதான் இது. பன்னோக்கு மருத்துவமனைகளில் 878 பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அந்த பணியிடங்களை நிரப்பிக் கொள்ளலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in