‘7 முறை நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டவர் ஓபிஎஸ்’ - ஆர்.பி. உதயகுமார் காட்டம்!

‘7 முறை நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டவர் ஓபிஎஸ்’ - ஆர்.பி. உதயகுமார் காட்டம்!

தனது நிலைப்பாட்டை தொடர்ந்து மாற்றிக் கொள்ளும் ஓ.பன்னீர்செல்வத்தை தலைவராக ஏற்றுக் கொள்ள முடியாது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு வழக்கில் ஜூலை 23ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சியில் ஒன்றிணைய வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பினருக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதற்குப் பதில் அளிக்கும் விதமாகப் பேசிய எடப்பாடி பழனிசாமி, கட்சிக்குத் துரோகம் செய்தவர்களோடு ஒன்றிணைய முடியாது எனக் காட்டமாகப் பதில் அளித்திருந்தார்.

இந்நிலையில் ஓபிஎஸ்க்கு எதிராக ஆர்.பி. உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் இதுவரை ஏழு முறை உங்களுடைய நிலைப்பாட்டை மாற்றி இருக்கிறீர்கள். இன்னும் எத்தனை முறை அந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வீர்கள் என யாருக்கும் தெரியாது. ஒவ்வொரு முறையும் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கிற ஓ.பன்னீர்செல்வத்தை நம்பி நாங்கள் செல்ல முடியாது எனத் தொண்டர்கள் சொல்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in