'திமுக அரசு காலாவதியான அரசு..' புதுப் பெயர் சூட்டிய ஆர்பி உதயகுமார்!

உதயகுமார்
உதயகுமார்

"திமுக எந்த முடிவு எடுத்தாலும் காலம் தாழ்த்தி காலாவதியாக தான் முடிவு எடுக்கிறது. திமுக அரசு காலாவதியான அரசு" என்று முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் விமர்சித்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இன்று காலை T.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர். அவர்களுக்கு ஆர்.பி.உதயகுமார் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். முன்னதாக அம்மா கோவில் உள்ள ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் ஆகியோரின் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

அதிமுகவில் இணைந்த இளைஞர்கள்
அதிமுகவில் இணைந்த இளைஞர்கள் HR Ferncrystal

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார், "காவேரி ஆணையம் தொடர்பான கூட்டத்தில் தமிழக அரசு ஆன்லைன் மூலம் பங்கேற்பதாக செய்தி வந்துள்ளது. தமிழகத்தின் ஜீவாதார பிரச்சினையான காவேரி பிரச்சினையை தீர்க்காமல் அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது. காவிரி ஆணையத்தின் கூட்டத்தில் நேரடியாக தமிழக அதிகாரிகள் கலந்து கொண்டால் கூட ஏமாற்றி, உச்ச நீதிமன்ற தீர்ப்பை பறிக்கும் அளவில் செயல்படுகின்றனர். தற்போது மேகதாது அணையை கூட கட்ட முயற்சிக்கிறார்கள். தற்போது காணொளி காட்சி மூலம் கலந்து கொள்வது என்பது தமிழக மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. திமுக அரசின் செயல் உப்புச்சப்பில்லாதாக உள்ளது.

தமிழகத்தில் வெப்ப சலனத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கை கோடை மழை காலத்தில் திமுக அரசு எடுக்கிறது. அதிமுக சார்பில் இதை சுட்டி காட்டிய போது தற்போது உத்தரவை வாபஸ் பெற்றுள்ளனர். செய்ய வேண்டிய நேரங்களில் செய்ய வேண்டிய பணிகளை செய்யாமல் அரசு உள்ளது. தற்போது காலாவதியான பேருந்து ஓடுகிறது. புதிய பேருந்து எதுவும் வாங்கவில்லை. ஏற்கனவே, உள்ள சேசில் கூண்டு கட்டி அதை ஓட விடுகின்றனர். அது மட்டும் அல்ல அரசு மருந்துகள் எல்லாம் காலாவதியாக உள்ளது. திமுக எந்த முடிவு எடுத்தாலும் காலம் தாழ்த்தி காலாவதியாக தான் முடிவு எடுக்கிறது. ஆகவே, திமுக அரசு காலாவதி அரசாக உள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் கஞ்சா 2.0, 3.0, 4,0 என பலமுறை கஞ்சா வேட்டையில் நடவடிக்கை எடுத்த போதும் கஞ்சாவை கட்டுப்படுத்த முடியவில்லை. தலைமைச் செயலாளர் ஆய்வு மேற்கொண்டாலும் பலன் இல்லை. தற்போது முதலமைச்சர் ஆய்வு நடத்தி என்ன பலன் இருக்கும்.

தமிழகத்தில் போதை பொருள் காட்டுதீயாக பரவி இளைய சமுதாயம் போதைப் பொருளால் அடிமையாகி சீர்கெட்டு வருவதால் நமது இதயம் சுக்கு நூறாக உடைகிறது. காட்டுத்தீயை தண்ணீரை பீய்ச்சி அணைக்க முடியாது. வெள்ளத்தால் திரண்டு வரும் நீரால் தான் அணைக்க முடியும். அதேபோல தமிழகத்தில் காட்டுத் தீயாக உள்ள கஞ்சா போதை பொருளை தடுக்க வேண்டுமென்றால் அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இதை மயில் இறகால் தடவக்கூடாது" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...


சவுக்கு சங்கர் வழக்கு... பெலிக்ஸ் ஜெரால்ட் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்!

ஓடுபாதையில் விமானம் மீது மோதிய டிரக்; உயிர் தப்பிய 180 பயணிகள்; புனேவில் பரபரப்பு!

கையில் கட்டுடன், கேன்ஸ் ரெட் கார்ப்பெட்டில் கவனம் ஈர்த்த ஐஸ்வர்யா ராய்!

பெரும்பான்மை கிடைக்கலைன்னா பாஜகவின் ‘பிளான் பி’ என்ன? - அமித் ஷா அட்டகாச பதில்!

அஞ்சலி கொலையில் திடீர் திருப்பம்... ஓடும் ரயிலிலிருந்து குதித்த குற்றவாளி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in