அமைச்சர் நிதின் கட்கரியை சந்திப்போம்... சுங்கச்சாவடி ஊழியர்களிடம் உறுதியளித்த ரவிக்குமார் எம்.பி!

டோல்கேட் ஊழியர்களுடன் ரவிக்குமார் எம்.பி
டோல்கேட் ஊழியர்களுடன் ரவிக்குமார் எம்.பி

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விழுப்புரம் புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை  மொரட்டாண்டி  சுங்கச்சாவடி  ஊழியர்கள்,  விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமாரை சந்தித்து தங்கள் கோரிக்கை குறித்து முறையிட்டனர்.  

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் -  புதுச்சேரி நெடுஞ்சாலையில் மொரட்டாண்டி என்னும் இடத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் புதிய நிர்வாகம் அமைந்த பிறகு ஏற்கனவே பணியில் இருந்த ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துவிட்டு புதியதாக வட இந்தியர்களைப்  பணியமர்த்தப் போவதாக நிர்வாகம் தெரிவித்தது. 

ரவிக்குமார்
ரவிக்குமார்

அதை எதிர்த்து ஏற்கனவே பணியில் இருக்கும் தொழிலாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை ரவிக்குமாரை அந்த  ஊழியர்கள் சந்தித்தனர்.  "ஏற்கனவே பணியில் இருக்கும் எங்களை அதே பணியில் மீண்டும் அமர்த்த நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என்று அவர்கள் ரவிக்குமாரிடம் கோரிக்கை வைத்தனர். 

சுங்கச்சாவடி
சுங்கச்சாவடி

அந்த கோரிக்கையை ஏற்ற  ரவிக்குமார்  “ பணியில் இருந்து நீக்கப்பட இருக்கிற உங்கள் அனைவரையும் அதே பணியில் அமர்த்த நிர்வாகத்திடம் வலியுறுத்துகிறேன்.  பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை  என்றால் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியை  நேரில் சந்தித்து நானும் எமது கட்சியின் தலைவர்  தொல். திருமாவளவனும்  வலியுறுத்துவோம்” என உறுதி அளித்தார்.

இதையும் வாசிக்கலாமே... சேலையில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்!

தெறிக்க விட்ட மதுரைக்காரைங்க... டாஸ்மாக்கில் தீபாவளி வசூல் ரூ.467 கோடி!

ஆந்திராவை அலற வைக்கும் ஜட்டி கேங்...போலீஸார் எச்சரிக்கை!

பகீர் வீடியோ... மதுவை புகட்டி இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்!

அம்மா மினி கிளினிக் அவ்வளவுதான்... முடித்து வைத்தார் மா.சுப்ரமணியன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in