புதுமைப் பெண் திட்டம் வரவேற்கத்தக்கது: தமிழக அரசை பாராட்டும் அதிமுக எம்பி ரவீந்திரநாத்!

ஓபிஎஸ் மற்றும் ரவீந்திரநாத்
ஓபிஎஸ் மற்றும் ரவீந்திரநாத்

மாணவிகளுக்கு ரூபாய் 1000 வழங்கும் திட்டத்தை வரவேற்பதாக அதிமுக எம்பி ரவீந்திரநாத் கூறியுள்ளார்.

பழனி மலைக்கோயிலில் தேனி அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் நேற்று சாமி தரிசனம் செய்தார். சாயரட்சை பூஜையில் கலந்து கொண்டார். பின்னர் தங்கரதம் இழுத்து சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "திமுக அரசு அறிவித்துள்ள மாணவிகளுக்கு ரூபாய் 1000 வழங்கும் திட்டத்தை வரவேற்கிறேன்" என்றார்.

மேலும், "வரப்போகும் தேர்தல்களில் அதிமுக மகத்தான வெற்றி பெற வேண்டுமானால் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். சசிகலா, டி.டி.வி.தினகரன் என அனைவரும் இணைந்து அதிமுகவை பலப்படுத்த வேண்டும்.

அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டில் மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலாசிக்கப்பட்டு வருகிறது. ஒருங்கிணைப்பாளர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in