பேருந்தில் படியில் தொங்கியபடி சென்ற மாணவர்களை தாக்கியதற்காக, மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் நடிகை ரஞ்சனா நாச்சியார்.
காஞ்சிபுரம் மாவட்டம், கெருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரஞ்சனா நாச்சியார். போரூரில் இருந்து குன்றத்தூர் நோக்கிச் சென்ற அரசு பேருந்தில் தொங்கிக் கொண்டு சென்ற மாணவர்களை கண்ட இவர் பேருந்தை நிறுத்தி ஓட்டுநர் மற்றும் நடத்துநரைக் கண்டித்தார்.
அத்துடன் படிக்கட்டில் தொங்கியவர்களை இறங்கிச் செல்லுமாறு ஆவேசமாக எச்சரித்தார். இறங்க யோசித்த சிலரை தாக்கினார்.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்ட நிலையில் ரஞ்சனா நாச்சியாரை போலீஸார் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். 40 நாட்கள் மாங்காடு காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
ஜாமினில் வெளிவந்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார். "மாணவர்களின் பாதுகாப்பு கருதிதான் அவ்வாறு நடந்து கொண்டேன். ஒவ்வொரு பெற்றோரும் பிள்ளைகளை பெற்று வளர்க்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள் என்பது எனக்கு தெரியும். பேருந்தில் வரும் மாணவர்கள் நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்கள் பாதுகாப்புடன் வீடு திரும்ப வேண்டும் என்ற நோக்கத்தில் நான் அவ்வாறு நடந்து கொண்டேன்.
அதற்காக மாணவர்களை அடித்து இருக்கக் கூடாது என்பது உண்மைதான். ஆனால் என்னுடைய செயலில் நியாயம் இருந்தது. அதற்காக மாணவர்கள் என்னை மன்னிக்க வேண்டும். மாணவர்களை அடித்ததால் அவர்களது பெற்றோர்களும் வருத்தத்தில் இருப்பார்கள். அவர்களும் என்னை மன்னிக்க வேண்டும்" என்று ரஞ்சனா மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
பரபரப்பு… காஞ்சிபுரத்தில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்!
கணவர் மிரட்டுகிறார்... காவல்துறையில் முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா புகார்!
பத்து தொகுதிகள்... பலிக்குமா பாஜக போடும் கணக்கு?
ஆதிக்கம் செலுத்தப்போவது யார்? இந்தியா – தென்னாப்பிரிக்கா இன்று மோதல்!