தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்கள் பணியிடமாற்றம்

நேற்று முதல்வர் ஆய்வு...இன்று டிரான்ஸ்பர்: ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்!

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்துக்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆய்வுப்பணிகளை மேற்கொண்ட நிலையில், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்கள் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக உள்ள பாஸ்கர பாண்டியன் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சமூக பாதுகாப்புத்துறை இயக்குநராக உள்ள வளர்மதி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக உள்ள அமர் குஷ்வாஹா சமூக பாதுகாப்புத்துறை இயக்குநராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் அறிவிப்புகள் மற்றும் திட்டங்களை நேரடியாக சென்று ஆய்வு செய்யும் ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ், நேற்று வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வில் ஈடுபட்டார். இந்த நிலையில் இந்த பணியிட மாற்ற அறிவிப்புகள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in