ஆயுதப்படைக்கு ரணில் விக்ரமசிங்கே திடீர் உத்தரவு: நாடாளுமன்றத்தைச் சுற்றி பாதுகாப்பு அதிகரிப்பு

ஆயுதப்படைக்கு ரணில் விக்ரமசிங்கே  திடீர் உத்தரவு: நாடாளுமன்றத்தைச் சுற்றி பாதுகாப்பு அதிகரிப்பு

இலங்கையின் தற்காலிக அதிபராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே, ஆயுதம் தாங்கிய படைப்பிரிவினருக்கு திடீர் உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை அதிபராக உள்ள கோத்தபய ராஜபக்சவிற்கு எதிராக வெடித்த மக்கள் புரட்சியால், தனது பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்பாக அவர் மாலத்தீவுக்கு தப்பிச் சென்றுள்ளார். இதனையடுத்து தற்காலிக அதிபருக்கான அதிகாரங்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வசம் சென்றுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். இதனிடையே ரணில் விக்ரமசிங்கே தற்காலிக அதிபராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு நகரில் இன்று மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது.

இந்த நிலையில், ஆயுதம் தாங்கிய படைப்பிரிவினருக்கு தற்காலிக அதிபரான ரணில் விக்ரமசிங்கே திடீரென ஒரு உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார். அதில், ஊரடங்கு சட்டமும், அவசர காலச் சட்டமும் நடைமுறையிலுள்ள தற்போதைய சந்தர்ப்பத்தில் நிலைமைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும். அத்துடன் நாட்டில் அமைதியை பேணுமாறு பொதுமக்களுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்ச இன்று பதவி விலகியதும் அடுத்த வாரம் புதிய அதிபரை நியமிக்க கட்சித் தலைவர்கள் ஏற்கனவே இணங்கியுள்ளதாக ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இதற்காகவே நாடாளுமன்றம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in