நாட்டின் நிதி நெருக்கடி குறித்த உண்மையை மூடி மறைத்து விட்டார்: கோத்தபய ராஜபக்ச மீது ரணில் விக்ரமசிங்கே திடீர் குற்றச்சாட்டு

நாட்டின் நிதி நெருக்கடி குறித்த உண்மையை மூடி மறைத்து விட்டார்: கோத்தபய ராஜபக்ச  மீது ரணில் விக்ரமசிங்கே திடீர் குற்றச்சாட்டு

இலங்கையின் நிதி நெருக்குடி குறித்த உண்மையை கோத்தபய ராஜபக்ச மூடிமறைத்து விட்டார் என்று இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் ஒரு செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், "நாட்டின் நிதி நெருக்கடி குறித்த உண்மைகளைக் கடந்த அரசு மூடி மறைத்து விட்டது. கோத்தபய ராஜபக்ச அரசு உண்மையைக் கூறவில்லை. மேலும் இலங்கை திவாலானதாக அந்த அரசு அறிவிக்கவில்லை.

மேலும், சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல வேண்டும் என கடந்த அரசு கூறவில்லை. இதன் காரணமாக மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். எங்களுக்கு 5 அல்லது 10 ஆண்டுகள் தேவையில்லை. அடுத்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் பொருளாதார நிலை சீராகும். 2024-ம் ஆண்டளவில் நாம் செயல்படும் பொருளாதாரத்தை உருவாக்குவோம், அது நிச்சயமாக வளர்ச்சியடையத் தொடங்கும்" என ரணில் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in