ராமநாதபுரம் எம்.பி குறித்த அவதூறு... ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு சாட்டை துரைமுருகனுக்கு நோட்டீஸ்!

சாட்டை துரைமுருகன்
சாட்டை துரைமுருகன்

தன்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசி வீடியோ வெளியிட்டதாக, ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு பிரபல யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு, ராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த துரைமுருகன், சாட்டை எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அதில், சினிமா, அரசியல் தொடர்பான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இதில், திமுக உட்பட அரசியல் கட்சிகள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் குறித்து கடுமையாக விமர்சித்து வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். சில நேரங்களில் அந்த வீடியோக்கள் சர்ச்சையாகி சாட்டை துரைமுருகன் மீது வழக்குகள் தொடுப்பதும், கைது நடவடிக்கை வரையும் சென்றுள்ளது.

ராமநாதபுரம் எம்.பி., நவாஸ் கனி
ராமநாதபுரம் எம்.பி., நவாஸ் கனி

இந்நிலையில், ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட எம்.பி நவாஸ்கனி குறித்து பேசி துரைமுருகன், கடந்த ஏப்.27ம் தேதி வீடியோ ஒன்றை, தனது சாட்டை சேனலில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில், ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் நவாஸ் கனியை மீண்டும் தேர்தலில் வெற்றி பெற வைப்பதற்காக, ஜமாத் மூலம் பணம் விநியோகம் செய்யப்பட்டதாக குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு எம்.பி நவாஸ் கனி கடும் கண்டனத்தை எழுப்பி இருந்தார்.

சாட்டை துரைமுருகன்
சாட்டை துரைமுருகன்

இந்நிலையில், இந்த வீடியோ தொடர்பாக யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு, எம்பி நவாஸ் கனி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், 'வீடியோவில் உள்ள தகவல்கள் உண்மைக்கு புறம்பாக உள்ளது. என்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த அவதூறு பேச்சுக்காக ரூ.5 கோடி நஷ்ட ஈடாக துரைமுருகன் வழங்க வேண்டும். இந்த நோட்டீஸ்க்கு பதில் அளிக்காவிடில் சாட்டை துரைமுருகன் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் தொடரப்படும்' என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பிளஸ் டூ மாணவர்களே... மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!

வாயில் மலத்தை வைத்துக் கொண்டு பேசாதீர்கள்... வைரமுத்துவுக்கு கண்ணதாசன் மகன் எச்சரிக்கை!

குமரியில் பெரும் சோகம்... கடலில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி!

வெட்டிப்போட்ட சாதி; கைதூக்கி விட்ட கல்வி... சாதித்துக் காட்டிய நாங்குநேரி மாணவர் சின்னதுரை!

பகீர்... முதலைகள் உள்ள கால்வாயில் 6 வயது மகனை வீசிய பெற்றோர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in