மாநிலங்களவைக்கு 41 பேர் போட்டியின்றி தேர்வு!- 16 இடங்களுக்கு தேர்தல்

மாநிலங்களவைக்கு 41 பேர் போட்டியின்றி தேர்வு!- 16 இடங்களுக்கு தேர்தல்

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், முன்னாள் காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் உட்பட 41 பேர் 11 மாநிலங்களில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை இடங்களை நிரப்ப தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி தேதி நேற்றுடன் முடிவடைந்தது.

இதில், உத்தர பிரதேசத்தில் இருந்து 11 பேர், தமிழ்நாட்டில் இருந்து 6 பேர், பிஹாரில் இருந்து 5 பேர் , சத்தீஸ்கரில் இருந்து 2 பேர், மத்திய பிரதேசத்தில் இருந்து 3 பேர் , தெலங்கானாவில் இருந்து 2 பேர், ஒடிசாவில் இருந்து 3 பேர், ஆந்திராவில் இருந்து 4 பேர், ஜார்க்கண்டில் இருந்து 2 பேர், பஞ்சாபில் இருந்து 2 பேர், உத்தரகண்டில் இருந்து ஒருவர் என மொத்தம் 41 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள 16 இடங்களுக்கு ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் ஜூன் 10-ம் தேதி வாக்கு பதிவு நடைபெறவுள்ளது.

ஹரியானாவில் உள்ள இரண்டு இடங்களுக்கு மூன்று வேட்பாளர்களும், ராஜஸ்தானில் உள்ள 4 இடங்களுக்கு ஐந்து வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். கர்நாடகாவில் உள்ள 4 இடங்களுக்கு பாஜக 3 வேட்பாளர்களையும், காங்கிரஸ் 2 வேட்பாளர்களையும், மதசார்பற்ற ஜனதா தளம் ஒருவரையும் நிறுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு 7 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in