ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த அதிகாரியின் உயிருக்கு ஆபத்து: பாதுகாப்பு கேட்டு காங்கிரஸ் மனு

ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த அதிகாரியின் உயிருக்கு ஆபத்து: பாதுகாப்பு கேட்டு காங்கிரஸ் மனு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கின் அரசு தரப்பு முக்கிய சாட்சியான ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி அனுசுயாவிற்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் ராமலிங்க ஜோதி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினி, முருகன், உள்ளிட்ட 6 பேர் சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டனர். சிறையில் இருந்து விடுதலையான பின் நளினி பல்வேறு ஊடகம் மற்றும் யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வந்தார். இந்நிலையில் கடந்த 15-ம் தேதி சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த இவ்வழக்கின் முக்கிய அரசு தரப்பு சாட்சியான ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி அனுசுயா, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட தினத்தன்று சம்பவ இடத்தில் நளினியை நான் பார்க்காமலே காவல்துறையினர் உந்துதலின் பேரில் அடையாள அணிவகுப்பில் பொய் கூறியதாக நளினி ஊடகங்களுக்கு பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக குற்றம்சாட்டினார்.

மேலும், நளினி அன்றையதினம் விடுதலைபுலிகள் இயக்கத்தினருடன் இருப்பது போல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் செய்தித்தாள்களில் வெளிவந்ததை சுட்டிக்காட்டி தடை செய்யப்பட்ட இயக்கத்தினருடன் நளினிக்கு என்ன வேலை என பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். அதேபோல் பல்வேறு சமூக வலைதளங்களிலும் ஓய்வுபெற்ற அரசு அதிகாரியான அனுசுயா இதுகுறித்து தொடர்ந்து பேசி வருகின்றார். இந்நிலையில் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் ராமலிங்க ஜோதி, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியான அனுசுயாவிற்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி மனு ஒன்றை அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் ராமலிங்க ஜோதி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட 6 பேர் சமீபத்தில் நீதிமன்ற உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்ட நிலையில், இவ்வழக்கில் அரசு தரப்பு முக்கிய சாட்சியான அனுசுயா விடுதலை செய்யப்பட்ட 6 பேரும் குற்றவாளிகள் தான் என்பதற்கு உண்டான பல்வேறு ஆதாரங்களை சுட்டிக்காட்டி தொடர்ந்து ஊடகங்கள், சமூக வலைதளத்தில் பேசி வருவதாக தெரிவித்தார்.

இதனால் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியான அனுசுயாவின் உயிருக்கு தடை செய்யப்பட்ட அமைப்புகள் மூலமாகவோ அல்லது வேறு ஏதாவது விதத்திலோ ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக அவர் கூறினார். தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் தனது கடைமையை சிறந்த முறையில் ஆற்றி ஓய்வு பெற்றுள்ள அனுசுயா உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையில் தமிழக காவல்துறை அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என குறிப்பிட்ட அவர், ஏற்கெனவே இது தொடர்பாக தமிழக டி.ஜி.பி-யை சந்தித்து மனு அளித்துள்ளதாகவும், தற்போது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் மனு அளித்துள்ளதாக தெரிவித்ததுடன், தங்கள் கோரிக்கையை ஏற்று காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in