நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் கோரிக்கை

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை கொச்சைப்படுத்திப் பேசிய நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்புக் கேட்க வேண்டும் என ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் கமிஷன், அப்போதைய ஆட்சியர் உள்ளிட்ட 17 பேர் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்தது. இந்நிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் நிர்வாகி கிருஷ்ண மூர்த்தி தூத்துக்குடியில் இன்று மாலை செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுத்தார்.

அப்போது அவர் கூறுகையில், “அருணா ஜெகதீசன் அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்த தமிழக அரசுக்கு நன்றி. இந்த சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே ஸ்டெர்லைட்டிற்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்றி, ஆலையை நிரந்தரமாக அகற்றுவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிர் இழந்தவர்களுக்கு நினைவுமண்டபம் கட்ட வேண்டும். விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் அறிக்கையில், 'மக்கள் நியாயமாக போராடிய போது திட்டமிட்டு மறைந்து இருந்து தாக்கியதும், சுட்டுக்கொன்றதும் தெளிவாகத் தெரியவந்துள்ளது.குற்றம் சாட்டப்பட்டிருக்கும் 17 பேரையும் முழுமையாக பணிநீக்கம் செய்ய வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையிலேயே தூத்துக்குடி கலவரத்தில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டார்கள் என்ற ரஜினிகாந்தின் கருத்தை அருணா ஜெகதீசனின் ஒருநபர் ஆணையம் கண்டித்துள்ளது. இதனால் ரஜினிகாந்த் தூத்துக்குடி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் ”என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in