ஆளுநர் ரவியை திடீரென சந்தித்தது ஏன்?- ரஜினி சொன்ன முக்கிய தகவல்

ஆளுநர் ரவியை திடீரென சந்தித்தது ஏன்?- ரஜினி சொன்ன முக்கிய தகவல்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினிகாந்த் இன்று திடீரென சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு குறித்து முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார் ரஜினி.

தமிழக ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவி பல சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். அவரது பேச்சு தமிழக அரசியலில் விவாதப் பொருளாக மாறி வருகிறது. சனாதனம், புதிய கல்விக் கொள்கை குறித்து அவர் பேசி வருவது சர்ச்சையாக வெடித்து வருகிறது. ஆளுநருக்கு எதிராக திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகள் செயல்பட்டு வருகிறது. ஆளுநரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அவர்கள் முழங்கி வருகின்றனர்.

இந்தப் பரபரப்புக்கு மத்தியில் நடிகர் ரஜினிகாந்த், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று காலை திடீரென சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது. இந்த சந்திப்புக்கு பின்னர் வீடு திரும்பிய ரஜினிகாந்த், போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு. காஷ்மீரில் பிறந்த ஆளுநர் ரவி தமிழ்நாட்டை மிகவும் நேசிக்கிறார். தமிழக மக்களின் நேர்மை, கடின உழைப்பு ஆளுநருக்கு மிகவும் பிடித்திருக்கிறது. முக்கியமாக இங்கு இருக்கிற ஆன்மிக உணர்வு அவரை மிகவும் ஈர்த்திருக்கிறது. தமிழ்நாட்டில் நல்லது செய்வதற்காக நான் ரெடியாக இருக்கிறேன் என்று கூறினார்.

ஆளுநர் ரவியுடன் அரசியல் குறித்தும் விவாதித்தேன். அவருடன் அரசியல் குறித்து பேசியதை பகிர்ந்து கொள்ள முடியாது. மீண்டும் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்கிறீர்கள். அரசியலுக்கு இனி வர மாட்டேன். பால், தயிர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை உயர்த்தி இருப்பது குறித்து பதில் சொல்ல விரும்பவிலலை. ஜெயிலர் படப்பிடிப்பு வரும் 15 அல்லது 22-ம் தேதி தொடங்கும்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in