காங்கிரஸ் வேட்பாளர் திடீர் மரணம் - ராஜஸ்தான் தேர்தலில் பரபரப்பு!

காங்கிரஸ் வேட்பாளர் திடீர் மரணம் - ராஜஸ்தான் தேர்தலில் பரபரப்பு!

ராஜஸ்தான் மாநிலத்தின் கரன்பூர் சட்டமன்றத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் கூனர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கட்சித் தலைவர்கள் புதன்கிழமை தெரிவித்தனர்.

கரன்பூரின் சிட்டிங் எம்எல்ஏவாக இருந்த கூனர், டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) முதியோர் மருத்துவப் பிரிவில் நவம்பர் 12ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

கூனார் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு இறந்ததாக மருத்துவமனை வழங்கிய இறப்புச் சான்றிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் ரத்த அழுத்த நோயாலும் அவதிப்பட்டு வந்தார்.

200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கு நவம்பர் 25-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இம்மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இரண்டு கட்சிகளும் இங்கே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

அவரது மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இரங்கல் தெரிவித்தார்.

காங்கிரஸ்
காங்கிரஸ்

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மத்திய பிரதேசத்தில் தங்கள் கட்சியின் எம்எல்ஏக்களை "விலைக்கு வாங்கினர்" என்றும் "ஆட்சியை எங்களிடம் இருந்து திருடினர்" என்றும் காங்கிரஸ் மூத்த எம்பி ராகுல் காந்தி கடந்த செவ்வாய்க்கிழமை குற்றம் சாட்டினார். 2020 இல் கமல்நாத் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த 22 எம்.எல்.ஏக்களின் கிளர்ச்சியைக் குறிப்பிட்டு, மக்களின் குரல் பாஜகவால் "நசுக்கப்பட்டது" என்று ராகுல் காந்தி கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in