ராகுல்காந்தியின் விமானத்துக்கு வாராணசியில் அனுமதி மறுப்பு: பாஜக பயப்படுகிறது என காங்கிரஸ் குற்றச்சாட்டு

ராகுல் காந்தி
ராகுல் காந்திராகுல்காந்தியின் விமானத்துக்கு வாராணசியில் அனுமதி மறுப்பு...

திங்கள்கிழமை வாராணசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி விமான நிலையத்தில் ராகுல் காந்தியின் விமானம் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

திங்கள்கிழமை இரவு வாராணசி விமான நிலையத்தில் ராகுல் காந்தியின் விமானம் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும், ஆனால் வேண்டுமென்றே அனுமதி வழங்கப்படவில்லை என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜய் ராய் குற்றம்சாட்டினார். அவர், “விமான நிலைய அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதால் அனுமதி வழங்கவில்லை. இதனால் அவர்கள் ஜனாதிபதி திரௌபதி முர்முவின் வருகையை ஒரு சாக்குப்போக்காக சொன்னார்கள். ராகுல் காந்தி இங்கு வந்து பின்னர் பிரயாக்ராஜ் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் அதிகளவிலான விமான இயக்கம் மற்றும் போக்குவரத்து நெரிசல் இருப்பதாக கூறி அனுமதி வழங்கப்படவில்லை" என குற்றம் சாட்டினார்.

மேலும், “ராகுல் காந்தியைக் கண்டு பாஜக அரசு பயப்படுகிறது. ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையை வழிநடத்தியதில் இருந்து பிரதமர் மோடி கவலையில் உள்ளார். இப்போது, அவர்கள் ராகுலை தொந்தரவு செய்கிறார்கள்" என்று அவர் கூறினார். திங்கள்கிழமை இரவு வாராணசி வரவிருந்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, இன்று காசி விஸ்வநாதர் கோயிலில் வழிபாடு நடத்த திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் அவரின் விமானத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அதே நேரத்தில், ஜனாதிபதி திரௌபதி முர்மு திங்கள்கிழமை மாலை வாராணசியில் உள்ள கோட்வால் பாபா கால பைரவர் கோவிலில் பிரார்த்தனை செய்த பிறகு காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பதவியேற்ற பின்னர் முதன்முறையாக காசிக்கு சென்ற குடியரசுத் தலைவர், மாலையில் தசாஷ்வமேத் காட்டில் நடைபெற்ற பிரம்மாண்டமான கங்கா ஆரத்தியிலும் கலந்துகொண்டார் என்று முதல்வர் அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in