மோடியின் ஆய்வகத்தில் புதிய பரிசோதனை: அக்னிபத் திட்டம் குறித்து ராகுல்காந்தி விமர்சனம்

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

பிரதமர் மோடியின் ஆய்வகத்தில் நடக்கும் புதிய பரிசோதனைதான் அக்னிபத் திட்டம் என காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல் காந்தி தன் ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.

மத்திய அரசு பிளஸ் 2 முடித்த இளைஞர்களுக்கு அக்னிபத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்தது. நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் அக்னிபத் திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால் இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு ஆண்டும் ஆறாயிரம் ராணுவ வீரர்கள் ஓய்வுபெறுகிறார்கள். ஆனால், அவர்களில் 3000 பேர் மட்டுமே அரசு வேலையைப் பெறுகின்றனர். இப்படியான சூழலில் அக்னிபத் திட்டத்தில் சேரும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் நிலை நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு என்னவாகும்?

பிரதமர் நரேந்திர மோடியின் ஆய்வகத்தில் நடக்கும் இந்தப் புதிய பரிசோதனையின் மூலம் நாட்டின் பாதுகாப்போடு மட்டுமல்லாமல், இளைஞர்களின் எதிர்காலமும் ஆபத்துக்கு உள்ளாகும் என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in