‘இமாசல பிரதேச வெற்றிக்கு காரணம் ராகுல் காந்தியின் யாத்திரைதான்’ - மல்லிகார்ஜுன கார்கே

‘இமாசல பிரதேச வெற்றிக்கு காரணம் ராகுல் காந்தியின் யாத்திரைதான்’ - மல்லிகார்ஜுன கார்கே

இமாசல பிரதேசத்தில் காங்கிரஸின் வெற்றிக்கு ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ’ யாத்திரைதான் காரணம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், இமாசலில் அக்கட்சி பெரும்பான்மையை கைப்பற்றியுள்ளது. இது தொடர்பாக பேசிய மல்லிகார்ஜூன கார்கே, "ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை இந்த வெற்றியைப் பெற எங்களுக்கு உதவியது. இமாசலில் தீவிர பிரச்சாரம் செய்த பிரியங்கா காந்திக்கு நன்றி. மேலும், இந்த வெற்றிக்காக மக்களுக்கும், எங்கள் தொண்டர்கள் மற்றும் தலைவர்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்" என்று கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் சில பேரணிகளை நடத்துவதற்காக ராகுல் காந்தி யாத்திரையில் இருந்து ஓய்வு எடுத்தார். ஆனால் அங்கு காங்கிரஸ் வரலாற்று இழப்பை சந்தித்துள்ளது. அதே நேரத்தில், இமாசல பிரதேசத்தில் ராகுல் காந்தி தேர்தல் பரப்புரை செய்யவில்லை. நவம்பர் 12 வாக்கெடுப்புக்கு முன்னதாக வாக்காளர்களுக்கு அவர் ஒரு அறிக்கையை மட்டும் வெளியிட்டார். வெற்றிக்குப் பின்னர் இன்று, “இமாசலில் காங்கிரஸின் அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் விரைவில் நிறைவேற்றப்படும்” என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in