சாட்டையால் தன்னைத்தானே அடித்துக் கொண்ட ராகுல் காந்தி: பழங்குடி மக்கள் பாரம்பரிய விழாவில் உற்சாகம்

சாட்டையால் தன்னைத்தானே அடித்துக் கொண்ட ராகுல் காந்தி: பழங்குடி மக்கள் பாரம்பரிய விழாவில் உற்சாகம்

தெலங்கானாவில் பழங்குடி மக்களின் பாரம்பரிய விழாவில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் இந்திய ஒற்றுமை யாத்திரை கன்னியாகுமரியில் செப்.7-ம் தேதி தொடங்கியது. அங்கிருந்து தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களின் வழியே மக்களின் உற்சாக வரவேற்புக்கு மத்தியில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த பயணத்தின் 57-வது நாளான இன்று தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் பட்டஞ்சேறு பகுதியில் ராகுல் காந்தி பயணத்தை மேற்கொண்டார். அப்போது இளைஞர்களுடன் இணைந்து அவர் கிரிக்கெட் விளையாடினார்.

அப்போது அப்பகுதியில் தெலுங்கானாவின் பாரம்பரிய பொனாலு திருவிழாவில் ராகுல் காந்தி கலந்துகொண்டார். அப்போது அவர்கள் கனமான சாட்டை கயிற்றை தங்களைத் தானே அவர்கள் அடித்துக் கொண்டனர். இதனை சங்காரெட்டி தொகுதி எம்எல்ஏ ஜெயபிரகாஷ் ராகுல் காந்தியிடம் செய்து காட்டினார். இதனையடுத்து ராகுல் காந்தி தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். இதனைப் பார்த்த பழங்குடி மக்கள் ஆரவாரம் செய்தனர். இதன் பின் திம்ஷா கலைஞர்கள் மற்றும் பழங்குடி மக்கள் ஆகியோருடன் இணைந்து ராகுல் காந்தி நடனமாடி மகிழ்ந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in