தந்தை நினைவிடத்தில் முதல் முறையாக அஞ்சலி: மலர் வளையம் வைத்து கண்கலங்கிய ராகுல் காந்தி!

தந்தை நினைவிடத்தில் முதல் முறையாக அஞ்சலி: மலர் வளையம் வைத்து கண்கலங்கிய ராகுல் காந்தி!

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில், அவரது மகன் ராகுல் காந்தி இன்று அஞ்சலி செலுத்தினார். ராஜீவ் காந்தி இறந்து 31 ஆண்டுகள் ஆன நிலையில் ராஜீவ்காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது இதுவே முதல்முறை ஆகும்.

2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரியிலிருந்து இந்திய ஒற்றுமை நடைபயணத்தை இன்று தொடங்க இருக்கிறார் ராகுல்காந்தி. குமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமைப் பயணத்தை மேற்கொள்ளும் ராகுல், 3,750 கிலோ மீட்டர் தூரத்துக்கு 12 மாநிலங்களில் பயணிக்கத் திட்டமிட்டு, மொத்தம் 150 நாட்கள் பயணம் செய்கிறார். இதற்காக நேற்று இரவு சென்னை வந்த ராகுல் காந்தி இன்று காலை தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ்காந்தியின் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார். ராஜீவ்காந்தி இறந்து 31 வருடங்கள் ஆன நிலையில் அவர் முதல் முறையாக ஸ்ரீபெரும்புதூர் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

விடியற்காலையில் ஸ்ரீபெரும்புதூர் வந்த ராகுல் காந்தியுடன் அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வப் பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் அவருடன் வந்திருந்தனர். தந்தையின் நினைவிடத்திற்கு வந்த ராகுல் காந்தி கண்களை மூடி, கை கூப்பி வணங்கினார். பின்பு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் மரக்கன்று ஒன்றை நட்டு வைத்தார். அதன் பிறகு நினைவிடத்தில் சிறிது நேரம் அமர்ந்திருந்தார். அப்போது ராஜீவ்காந்தி நினைவிடம் குறித்து அக்கட்சியினர் ராகுலுக்கு விளக்கினார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in