‘மோடி பொய் சொல்றார்..’ சீனாவின் ஆக்கிரமிப்புக்கு லடாக் ஆளானதாக ராகுல் காந்தி ரௌத்திரம்!

மோடியை சாடும் ராகுல்
மோடியை சாடும் ராகுல்
Updated on
2 min read

‘லடாக்கில் ஓர் அங்குலம் கூட சீனா ஆக்கிரமிக்கவில்லை என பிரதமர் மோடி சொல்வதும் முழுக்கப் பொய்..’ என லடாக்கிலிருந்து திரும்பிய ராகுல் காந்தி சாடியுள்ளார்.

அருணாச்சல் பிரதேசத்தை தனது தேச வரைபடத்தில் உள்ளிட்டிருக்கும் சீனாவுக்கு எதிராக இந்தியாவில் புயல் கிளம்பியுள்ளது. 1962 போரில் சீனா ஆக்கிரமித்த இந்தியப் பகுதிகளையும், அருணாச்சல பிரதேசத்தின் பெரும்பகுதியையும் தனது தேச வரைபடத்தில் சேர்த்திருக்கும் சீனாவுக்கு எதிராக, இந்தியா தனது கண்டனங்களை உடனடியாக பதிவு செய்தது. அரசின் அதிகாரபூர்வ கண்டனம் முதல் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் அதிரடி பதில் வரை இவற்றில் அடங்கும்.

உலக வரைபடத்தில் இந்தியா - சீனா
உலக வரைபடத்தில் இந்தியா - சீனா

முன்னதாக, சீனாவின் அருணாச்சல பிரதேச ஆக்கிரமிப்பிற்கு காங்கிரஸ் ஆட்சிக்காலத்தின் அலட்சியமே காரணம் என பாஜக குற்றம்சாட்டி வந்தது. இதனை மறுத்திருக்கும் காங்கிரஸ் கட்சி, இந்தியாவின் சீன எல்லை நெடுக தற்போது சீனா ஆக்கிரமித்து வருவதை ஆதாரத்துடன் நிறுவியது. அவற்றை பிரதமர் மோடி உள்ளிட்டோர் மறுத்திருக்கும் சூழலில், காஷ்மீரின் லடாக் பிராந்தியத்தையும் சீனா ஆக்கிரமித்துள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தற்போது சாடியுள்ளார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

செவ்வாயன்று லடாக்கிலிருந்து திரும்பிய ராகுல் காந்தி, புதனன்று கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் அரசு தொடங்கும் புதிய நலத்திட்டங்களின் விழாவுக்கு புறப்படுகையில் பத்திரிக்கையாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “தற்போது லடாக்கிலிருந்து திரும்பியதன் அடிப்படையில் சொல்கிறேன்; லடாக்கில் பெரும்பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது. இது லடாக் பிராந்தியம் முழுக்கத் தெரியும். ஆனால், லடாக்கில் ஓர் அங்குலம் கூட ஆக்கிரமிப்புக்கு ஆளாகவில்லை என பிரதமர் மோடி சொல்கிறார். இது முழுக்கவும் பொய். அருணாச்சல பிரதேசத்தை உள்ளடக்கி சீனா வரைபடம் வெளியிட்டிருப்பதும் தீவிரமான விவகாரம். இதில் பிரதமர் மோடி பதில் சொல்லியே ஆக வேண்டும்” என்று சாடியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in