காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் 30 லட்சம் அரசு வேலைகள் நிரப்பப்படும்... நெல்லையில் ராகுல் காந்தி அதிரடி!

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் காலியாக உள்ள 30 லட்சம் அரசு வேலைகள் உடனடியாக நிரப்பப்படும் எனவும், அது வெறும் தொடக்கம் மட்டுமே எனவும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதற்காக இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், வயநாடு எம்பி-யுமான ராகுல் காந்தி வருகை தந்தார். அவருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து பாளையங்கோட்டையில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.

ராகுல் காந்தியுடன் கனிமொழி, ராபர்ட் புரூஸ், விஜய் வசந்த்
ராகுல் காந்தியுடன் கனிமொழி, ராபர்ட் புரூஸ், விஜய் வசந்த்

அப்போது பேசிய ராகுல் காந்தி, ”வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது தமிழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி நிதி தர மறுத்துவிட்டார். மீனவர் பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை ஆகியவற்றில் மத்திய அரசு எதையும் தமிழகத்திற்கு செய்யவில்லை. நாடு முழுவதும் இளைஞர்கள் வேலை வாய்ப்பு இன்றி தவித்து வருகிறார்கள். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக அரசு பணிகளில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும். அது வெறும் தொடக்கம் மட்டுமே.” என்றார்.

கூட்டத்தில் பங்கேற்றவர்களில் ஒரு பகுதியினர்
கூட்டத்தில் பங்கேற்றவர்களில் ஒரு பகுதியினர்

மேலும், “வேலை வாய்ப்பு பயிற்சிகள் வழங்கி, அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் இளைஞர்களுக்கு கோடிக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். வேலையில்லாத டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகளுக்காக வேலைவாய்ப்பு பயிற்சி சட்டத்தை நிறைவேற்றுவோம். நாடு முழுவதும் பெரு முதலாளிகளின் 16 லட்சம் கோடி ரூபாய் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. ஆனால் இளைஞர்களை வேலைவாய்ப்பின்றி தவிக்க வைத்திருக்கிறார்கள். தகுதி பெற்ற ஒவ்வொரு இளைஞருக்கும் ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவியுடன் பயிற்சி தர திட்டமிட்டு இருக்கிறோம். தேர்தல் ஆணையர்களை பிரதமர் தான் தேர்வு செய்கிறார். காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்குகிறார்கள்.” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “நீட் தேர்வு என்பது ஏழைகளுக்கு எதிரான ஒரு தேர்வு. அதை மாநில அரசுகளே முடிவு செய்யும்படி விட காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. மாநில அரசுகள் விரும்பினால் மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும். நாட்டை பாதுகாக்கும் பணியில் பெண்கள் தான் முன்னணியில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கான உரிமைகள் வழங்கப்படுவதில்லை. ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு பெண் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு மத்திய அரசு வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கும். இது மாதம் 8,500 ரூபாய் என்ற அடிப்படையில் வழங்கப்படும். இந்தியாவிலிருந்து வறுமையை நிரந்தரமாக ஒழிக்க இது உதவிடும்.” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...   

ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட முக்கிய குற்றவாளிகள் இருவர் கைது... ராமேஸ்வரம் கஃபே வழக்கில் பரபரப்பு!

ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பிய பெண் மீது பாஜகவினர் தாக்குதல்... திருப்பூரில் பரபரப்பு; அதிர்ச்சி வீடியோ!

தெலங்கானாவில் இருந்து ரயிலில் போதை மாத்திரைகள் கடத்தல்... சென்னையில் 3 பேர் கைது!

ப்ளீஸ்... இதையாவது செய்யுங்க... ரஜினிக்கு நெருக்கடி தரும் பாஜக!

குடியால் நேர்ந்த சோகம்...30 வயதில் அகால மரணம் அடைந்த பிரபல பாடகி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in