எங்களை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள் மோடி... ராகுல் காந்தி பதிலடி!

ராகுல் காந்தி
ராகுல் காந்திஎங்களை எந்த பெயரில் வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள் மோடி... ராகுல் காந்தி பதிலடி

எங்களை என்ன பெயர் சொல்லி வேண்டுமானாலும் அழைத்து கொள்ளுங்கள். நாங்கள் இந்தியா தான் என்று பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடிஎங்களை எந்த பெயரில் வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள் மோடி... ராகுல் காந்தி பதிலடி

பாஜகவின் நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில் பிரதம்ர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "எதிர்கட்சிகள் திசை தெரியாமல் சென்று கொண்டிருக்கின்றன. எதிர்கட்சிகள் கூட்டணி அதிக நாட்களுக்கு எதிர்கட்சியாகவே இருக்க வேண்டுமென தீர்மானித்து விட்டனர். அது தான் அவர்களின் தலையெழுத்தாகவும் உள்ளது. இதுபோன்று குறிக்கோளற்ற எதிர்கட்சிகளைப் பார்த்ததே இல்லை,

எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு இந்தியா என பெயர் வைத்திருக்கிறார்கள். பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா, தீவிரவாத அமைப்பான இந்தியன் முஜாகிதீன், கிழக்கு இந்திய கம்பெனி போன்றவற்றில் கூடத்தான் இந்தியா என வருகிறது. தோற்றுப்போன, நம்பிக்கையற்ற, இலக்கற்ற சோர்வான கூட்டமே எதிர்க்கட்சிகள். இந்தியா என்ற பெயரை மட்டும் வைத்துக்கொண்டு எதுவும் செய்ய முடியாது" என்று பேசினார்.

மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உடனடியாகப் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் “ எங்களை என்ன பெயர் சொல்லி வேண்டுமானாலும் அழைத்து கொள்ளுங்கள். நாங்கள் இந்தியா தான். மணிப்பூர் பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்ணீரைத் துடைத்து, அன்பையும் அமைதியையும் மீண்டும் நிலைநாட்டுவோம்.

இந்தியா என்ற தத்துவத்தை மணிப்பூரில் கட்டமைப்போம். மணிப்பூர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவவும், ஆறுதல் படுத்தவும், அவர்களின் கண்ணீரைத் துடைக்கவும் நாங்கள் இருக்கிறோம்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in