‘அமேதியில் போட்டியிடுவது குறித்த இறுதி முடிவு...’ ராபர்ட் வதேரா ஆர்வத்தை அடுத்து ராகுல் காந்தி வெளிப்படை

காஜியாபாத்தில் இன்று பேட்டியளித்த ராகுல் காந்தி
காஜியாபாத்தில் இன்று பேட்டியளித்த ராகுல் காந்தி

அமேதி தொகுதியில் தான் போட்டியிடுவது தொடர்பான கேள்விகளுக்கு ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார். பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா அமேதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததை அடுத்து, ராகுல் காந்தியின் இந்த விளக்கம் வெளியாகி உள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலத்தின் ரேபரேலி, அமேதி ஆகிய மக்களவைத் தொகுதிகள் பல தலைமுறைகளாக காங்கிரஸ் கட்சியின் ஆஸ்தான தொகுதிகளில் ஒன்றாக இருந்து வந்தன. குறிப்பாக நேரு குடும்பத்தின் வாரிசுகள் இந்த தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்துள்ளனர். இந்த வரிசையில் 2004 முதல் அமேதி தொகுதியின் எம்பி-யாக வென்று வந்த ராகுல் காந்தி, கடந்த 2019 தேர்தலில் தோல்வியடைந்தார். கேரளத்தின் வயநாடு மற்றும் உத்தரபிரதேசத்தின் அமேதி என 2 தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி, அமேதியில் எதிர்த்துப்போட்டியிட்ட ஸ்மிருதி இரானியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

ராகுல் காந்தி - ஸ்மிருதி இரானி
ராகுல் காந்தி - ஸ்மிருதி இரானி

இதனையடுத்து தற்போதைய தேர்தலில், அமேதி, வயநாடு என 2 தொகுதிகளிலும் ராகுல் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வயநாடு தொகுதிக்கு மட்டுமே ராகுல் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார். இது அரசியல் வெளியில் புயலைக் கிளப்பியது. பாஜக வேட்பாளராக மீண்டும் அமேதியில் களமிறங்கி இருக்கும் ஸ்மிருதி இரானி, “தன்னை நம்பி வாக்களித்த அமேதி மக்களை ராகுல் காந்தி ஏமாற்றிவிட்டார்” என்று தாக்கினார். ராகுல் காந்திக்கான இடைஞ்சல் பாஜகவின் ஸ்மிருதி இரானி பக்கமிருந்து மட்டும் எழவில்லை; ராகுலின் மைத்துனர் ராபர்ட் வதேராவிடமிருந்தும் வந்தது.

காங்கிரஸ் கட்சிக்கு என பிரத்யேக வாக்கு வங்கி கொண்டிருக்கும் அமேதி தொகுதியில் போட்டியிட ராபர்ட் வதேரா தன்னிச்சையாக விருப்பம் தெரிவித்தார். ”இது அமேதி மக்களின் எதிர்பார்ப்பு” என்றும் அவர் விளக்கமளித்தார். ராபர்ட் வதேராவின் அமேதி ஆர்வத்துக்கு காங்கிரஸ் தலைமை இன்னமும் உடன்படவில்லை. எனினும் அமேதியை ராகுல் காந்தி தவிர்ப்பதே இந்த சர்ச்சைக்கு வழிவகுப்பதாக பேச்சு எழுந்தது. இதனிடையே அமேதி தொகுதியில் தான் போட்டியிடுவது குறித்து ராகுல் காந்தி இன்று வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.

ராபர்ட் வதேரா - பிரியங்கா காந்தி
ராபர்ட் வதேரா - பிரியங்கா காந்தி

உத்தரபிரதேசத்தின் காஜியாபாத்தில் அகிலேஷ் யாதவ் உடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது, இன்றைய தினம் ராகுல் காந்தி பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அவற்றில் ஒன்றாக அமேதியில் போட்டியிடுவது தொடர்பான அவரது திட்டம் குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, “அமேதி தொகுதி குறித்து கட்சி முடிவு செய்யும். எந்த உத்தரவைப் பெற்றாலும், அதற்கு நான் கட்டுப்படுவேன்” என்றார். மேலும் காங்கிரஸ் கட்சியில் தேர்தல் முடிவுகளை மத்திய தேர்தல் குழுதான் எடுக்கிறது என்றும் ராகுல் காந்தி விளக்கமளித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

இந்த 5 தொகுதிகளில் வெற்றி இழுபறி!

தமிழ்நாட்டின் மிகப்பெரிய சந்தைக்கு 2 நாட்கள் விடுமுறை... தேர்தலை முன்னிட்டு அறிவிப்பு!

புதுச்சேரியில் இன்று முதல் 144 தடை உத்தரவு... தேர்தல் ஆணையம் அதிரடி!

தாயைப் பிரிந்த ஏக்கம்... 25 நாட்களாக தவித்த குட்டியானை உயிரை இழந்தது!

நேரிலும், செல்போனிலும் வாலிபர் காதல் டார்ச்சர்.... மனமுடைந்த பள்ளி மாணவி தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in