
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நீண்ட காலமாக பப்பு என்று அவரது எதிர்ப்பாளர்களால் அழைக்கப்படுகிறார். பப்பு என்று அழைக்கும் போது மோசமாக உணர்கிறீர்களா என்ற கேள்விக்கு அவர் தற்போது பதிலளித்துள்ளார்.
பாரத் ஜோடோ யாத்திரையின்போது ஒரு பேட்டியில் பப்பு என அழைக்கப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி, "என்னை பப்பு என அழைப்பதை மோசமாக உணரவில்லை. அது அவர்களின் இதயத்தில் உள்ள பயத்தை காட்டுகிறது. அவர்கள் மகிழ்ச்சியற்று உள்ளனர். அனைத்து பெயர் அழைப்பையும் நான் வரவேற்கிறேன். தயவு செய்து என் பெயரை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள்" என தெரிவித்தார்.
மேலும், "இந்திரா காந்தி இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்படுவதற்கு முன்பு, அவர் குங்கி குடியா என்று அழைக்கப்பட்டார். 24x7 என்னைத் தாக்கும் அதே நபர்கள் அவரையும் குங்கி குடியா என்று அழைத்தனர். அதன்பிறகு, குங்கி குடியா இரும்புப் பெண்மணி ஆனார். அவர் எப்போதும் இரும்புப் பெண்மணியாகவே இருந்தார்" என்று கூறினார்