ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு கோடி ரூபாய்: ராகுல் காந்தி வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!

ராகுல் காந்தி
ராகுல் காந்திஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு கோடி ரூபாய்: ராகுல் காந்தி வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு

கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கல்யாண கர்நாடகா பகுதியில் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் தலா ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் ஜெவர்கியில் பேசிய ராகுல் காந்தி, “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கல்யாண கர்நாடகா பகுதியில் ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கப்படும். இவ்வாறு கல்யாண கர்நாடகா பகுதி கிராமங்களுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வழங்கப்படும். 40 சதவீத கமிஷன் என்பது பாஜகவின் விருப்பமான எண் என்பதால், சட்டமன்றத் தேர்தலில் அவர்களுக்கு 40 இடங்கள் மட்டுமே கிடைக்கும். காங்கிரஸ் கட்சிக்கு 150 இடங்கள் கிடைக்கும், நாங்கள் கர்நாடகாவில் ஆட்சி அமைக்கப் போகிறோம்” என்று கூறினார்.

மேலும், காங்கிரஸ் கட்சியின் ஐந்தாவது தேர்தல் வாக்குறுதியையும் ராகுல் காந்தி அறிவித்தார். “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் பெண்களுக்கு பேருந்து பயணம் இலவசம். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அதை நடைமுறைப்படுத்துவோம்” என்று கூறினார்.

காங்கிரஸின் நான்கு முக்கிய உத்தரவாதங்களை அவர் மீண்டும் வலியுறுத்தினார். பெண் குடும்பத் தலைவிக்கு ரூ.2,000, ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், வேலையில்லாத பட்டதாரிகளுக்கு ரூ.3,000 மற்றும் வேலையற்ற டிப்ளமோ பட்டம் பெற்றவர்களுக்கு ரூ. 1,500 மற்றும் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் மாதம் 10 கிலோ அரிசி ஆகியவை காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகள் ஆகும்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in