காங்கிரஸார் எதிர்ப்பையும் மீறி வாஜ்பாய் நினைவிடத்தில் ராகுல் காந்தி அஞ்சலி

காங்கிரஸார் எதிர்ப்பையும் மீறி வாஜ்பாய் நினைவிடத்தில் ராகுல் காந்தி அஞ்சலி
Manvender Vashist Lav

காங்கிரஸ் கட்சியினரின் எதிர்ப்பையும் மீறி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், இன்று காலை மகாத்மா காந்தி நினைவிடம், முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரின் நினைவிடத்தில் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார்.

காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எழுந்த விமர்சனங்கள், எதிர்ப்புகளை மீறி வாஜ்பாய் நினைவிடத்தில் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தியுள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் அலுவலகத்தின் 4 ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான கவுரவ் பாந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில், "வாஜ்பாய் ஒரு பிரிட்டிஷ் உளவாளியாக இருந்தார். அவர் பாபர் மசூதி கலவரத்தின் போது மக்களிடம் மோதலைத் தூண்டினார். நெல்லி படுகொலையைத் தூண்டினார்'' போன்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in