வயநாட்டில் ராகுல் காந்தியின் அலுவலகம் சூறை: கேரளாவில் பதற்றம்

வயநாட்டில் ராகுல் காந்தியின் அலுவலகம் சூறை: கேரளாவில் பதற்றம்

கேரள மாநிலம் வயநாட்டில் அமைந்துள்ள ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை குண்டர்கள் சூறையாடினார்கள்.

சுற்றுச்சுவர் மீது எறிக் குதித்து வயநாட்டில் உள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தியின் அலுவலகத்தில் உள்ளே புகுந்த கும்பல் கண்ணில் பட்ட பொருட்களை எல்லாம் அடித்து உடைத்து சூறையாடினார்கள். இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்கள் தான் ராகுல் காந்தியின் அலுவலகத்தை சூறையாடியதாக இளைஞர் காங்கிரஸார் குற்றம்சாட்டியுள்ளனர்.

கடந்த சில வாரங்களாகவே கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் சார்பில் பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பல இடங்களில் காங்கிரஸ் மற்றும் சிபிஎம் தொண்டர்களிடையே மோதலும் வெடித்தது. இந்த சூழலில் தற்போது ராகுல் காந்தியின் அலுவலகமும் சூறையாடப்பட்டுள்ளதால் கேரளாவில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in