கோரிக்கைகளை அடுக்கிய பட்டியலின செயற்பாட்டாளர்கள்: உறுதியளித்த ராகுல் காந்தி!

ராகுல் காந்தியுடன் எவிடென்ட்ஸ் கதிர்
ராகுல் காந்தியுடன் எவிடென்ட்ஸ் கதிர்

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை நடைபயணத்தைத் தொடங்கியிருக்கிறார் ராகுல் காந்தி. இந்தப் பயணத்தில் பல்வேறு பொதுத்தளங்களில் இயங்குவோருடன் ராகுல் காந்தி தொடர் சந்திப்புகளை நடத்துவதாகவும், அதனாலேயே ஊடகத்தினர் உடன் பயணிக்க அனுமதிக்கப்படவில்லை என்பது குறித்தும் தொடர்ந்து எழுதியிருக்கிறோம். இந்நிலையில், ராகுல் காந்தி பட்டியலின செயற்பாட்டாளர்களுடன் சந்திப்பை மேற்கொண்டிருக்கும் தகவல் கசிந்துள்ளது.

எவிடென்ஸ் கதிர் உள்பட பட்டியலின மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து காங்கிரஸ் முன்னாள் அகில இந்தியத் தலைவர் ராகுல் காந்தியை நடைபயணத்தில் அவர் வந்திருந்த பள்ளி வளாகத்தில் சந்தித்தனர். அவர்களுடன் முப்பது நிமிடங்கள் ராகுல் காந்தி உரையாடினார். அப்போது தமிழகத்தில் நடக்கும் மனித உரிமைக் காப்பாளர்களின் படுகொலைகள், ஆணவப் படுகொலைகள், பட்டியலின மக்களின் நிலப்பறிப்பு, சாதிய வன்கொடுமைகள் குறித்தெல்லாம் பட்டியலின செயற்பாட்டாளர்கள் எடுத்துக் கூறியிருக்கின்றனர்.

தொடர்ந்து எவிடென்ஸ் கதிர், எவிடென்ஸ் அமைப்பு தயாரித்த ஆணவப் படுகொலைக்கு எதிரான வரைவை அவரிடம் கொடுத்து சட்டமாக்குவதற்கான முயற்சியை எடுக்க ராகுல் காந்தியிடம் வலியுறுத்தினார். ராகுலும் அதற்கு ஆவண செய்வதாகச் சொன்னார். இதேபோல் ராகுல் காந்தியை, விவசாயிகள் சங்கம் சார்பில் பி.ஆர்.பாண்டியன் சந்தித்து விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைத்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in