தச்சர்களிடம் நாற்காலி செய்ய கற்றுக்கொண்ட ராகுல் காந்தி... வைரல் வீடியோ!

தச்சர்களிடம் நாற்காலி செய்ய கற்றுக்கொண்ட ராகுல் காந்தி... வைரல் வீடியோ!

டெல்லியில் உள்ள மரச்சாமான்கள் செய்யும் இடத்திற்கு நேரில் சென்று அங்குள்ள தச்சர்களிடம் ராகுல்காந்தி கலந்துரையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநில தேர்தலை அடுத்து, இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தலுல் நடக்கவுள்ளது. இதனால் பிரதான கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் வேலைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

ஒரு வருடத்திற்கு முன்னதாகவே காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தேர்தல் பணிகளை ஆரம்பித்து விட்டார். தமிழகத்தில் கன்னியாகுமரியில் ஆரம்பித்த பாரத ஒற்றுமை யாத்திரையானது தமிழகம் , கேரளா, கர்நாடகா என கடந்து காஷ்மீரில் நிறைவானது.

அதற்கடுத்தும், பிரச்சார மேடைகள் தவிர்த்து மக்களை நேரடியாக களத்தில் சந்தித்து வருகிறார் ராகுல்காந்தி, வயல்வெளிகளுக்கு சென்று விவசாயிகளுடன் கலந்துரையாடுவது, மெக்கானிக்குகளுடன் பணியாற்றுவது, தொண்டர்களுடன் இருசக்கர வாகனத்தில் பயணிப்பது என அவ்வப்போது மக்களை நேரில் சந்தித்து சாமானிய மக்களின் நிலைகளை களத்தில் இருந்து கேட்டறிந்து வருகிறார் ராகுல்காந்தி.

கடந்த சில நாட்களாக மிசோராம், தெலங்கானா என தேர்தல் பிரச்சாரத்தில் பிசியாக இருந்த ராகுல்காந்தி, இடையில் டெல்லியில் கிருட்டி நகரில் உள்ள மரச்சாமான்கள் செய்யும் இடத்திற்கு நேரில் சென்று அங்குள்ள தச்சர்களிடம் கலந்துரையாடியுள்ளார்.

இதுகுறித்த காணொலியை தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, தச்சர்களிடம், உங்களுக்கு கடன் கிடைத்தால் என்ன செய்வீர்கள்? என கேட்டேன், அதற்கு அவர்கள், "மரம் வாங்குவேன், பெரிய ஆர்டர் எடுப்பேன், கைவினை கலைஞர்களை வேலைக்கு அமர்த்துவேன், வியாபாரத்தை விரிவுபடுத்துவேன். " என்கிறார்

கிருட்டி நகரின் தச்சர் சகோதரர்களுடன் ஒரு நாள் முழுவதையும் செலவழித்து, அவர்களின் வேலையைக் கற்றுக்கொண்டேன். அவர்கள் எனக்கு 'நாற்காலி' செய்யும் முறையை கற்பித்தனர் எனவும் பதிவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in