’ராகுல் காந்தி குஜராத்திகளுக்கு எதிரானவர்’ - ஜே.பி.நட்டா விமர்சனம்

’ராகுல் காந்தி குஜராத்திகளுக்கு எதிரானவர்’ - ஜே.பி.நட்டா விமர்சனம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குஜராத்திகளுக்கு எதிரானவர் என்று பாஜக தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் குஜராத் சட்டசபைக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் மீது கடுமையான தாக்குதலை தொடங்கியுள்ளது பாஜக. தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, "இந்த முறை குஜராத் முந்தைய சாதனைகளை முறியடிக்கும் என்று நான் நம்புகிறேன். குஜராத் பல துறைகளில் வளர்ச்சியடைந்துள்ளது. இதனால் மக்கள் மீண்டும் எங்களுக்கு வாக்களிப்பார்கள். மேதா பட்கர் எப்போதும் வளர்ச்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். ராகுல் காந்தி அவருக்கு அருகில் நிற்கிறார் என்றால், அவரும் குஜராத்திக்கு எதிரானவர் என்று அர்த்தம்” என தெரிவித்தார்

நர்மதா அணையால் உள்ளூர் மக்கள் இடம்பெயர்வதைத் தடுக்க நர்மதா பச்சாவோ போராட்டத்தை முன்னின்று நடத்திய சமூக ஆர்வலர் மேதா பட்கர், சனிக்கிழமையன்று ராகுல் காந்தியுடன் பாரத் ஜோடோ யாத்திரையில் மகாராஷ்டிராவில் கலந்துகொண்டார். இதனைத் தொடர்ந்து ஜே.பி.நட்டா, ராகுல் காந்தியை தீவிரமாக விமர்சித்துள்ளார்.

குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. டிசம்பர் 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in