குழந்தையை தோளில் சுமந்தவாறு யாத்திரை போன ராகுல் காந்தி: வைரலாகும் வீடியோ

குழந்தையை தோளில் சுமந்தவாறு யாத்திரை போன ராகுல் காந்தி: வைரலாகும் வீடியோ

ஆந்திராவில் மக்கள் ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்றுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ஒரு குழந்தையை தனது தோளில் சுமந்து கொண்டு செல்லும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரையை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தலைமையேற்று நடத்தி வருகிறார். செப்.7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை கேரளா வழியாக கர்நாடகாவிற்குள் நுழைந்து ஆந்திரா வழியாக நவ.7-ம் தேதி மகாராஷ்டிராவிற்குள் நுழைகிறது.

ஆந்திராவில் இந்த யாத்திரையின்போது, வழிநெடுகிலும் ராகுல்காந்திக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். கர்னூல் மாவட்டத்தில் ராகுல் காந்தி இன்று யாத்திரையை மேற்கொண்டார். அப்போது அவருடன் நடைபயணம் வந்த ஒரு குழந்தையை தோளில் சுமந்து கொண்டு ராகுல் காந்தி சென்றார். இதைப் பார்த்த பொதுமக்கள் ராகுலுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. நாளை நடைபெற உள்ள யாத்திரையில் ராகுலுடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் கலந்துகொள்வார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற மல்லிகார்ஜூன கார்கே, கட்சியின் தலைவராக அக்.26-ம் தேதி பொறுப்பேற்கிறார். அந்நிகழ்வில் பங்கேற்க அக்.23-ம் தேதி யாத்திரையை முடித்துக்கொண்டு ராகுல் காந்தி டெல்லி செல்வார் என்றும், அக்.26-ம் தேதி டெல்லி நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு அக்.27-ம் தேதி முதல் மீண்டும் யாத்திரையில் பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in