ராகுல் காந்திக்கு எதிராக காப்பிரைட் வழக்கு

ராகுல் காந்திக்கு எதிராக காப்பிரைட் வழக்கு

பிரபல சினிமா பாடலை உரிய அனுமதியின்றி நகலெடுத்து வீடியோ தயாரித்தது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக காப்பிரைட் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய ஒற்றுமை பயணம் என்ற தலைப்பில் கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் வரையிலான நடைபயணத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸார் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் தொடங்கிய இந்த பயணம் கேரளா, கர்நாடகம், ஆந்திரா வாயிலாக தற்போது தெலங்கானாவில் தொடர்ந்து வருகிறது. ஒற்றுமை பயணத்தின் விளம்பரத்துக்காகவும், நடைபயணத்தில் பங்கேற்கும் தொண்டர்களின் உற்சாகத்துக்காகவும் பல்வேறு பாடல் வீடியோக்கள் உருவாக்கப்பட்டன. அவை சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டும் வருகின்றன.

இந்த வீடியோக்களில் சமகாலத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் பிரபலமான திரைப்பாடல்களின் இசை வடிவம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சார கூட்டங்களில் அனைத்து கட்சிகள் மத்தியிலும் இம்மாதிரியான பிரயேகங்கள் வழக்கமானது என்றபோதும் அவை சட்டப்படி தவறானது ஆகும். குறிப்பிட்ட இசை மற்றும் பாடலுக்கு உரிமம் பெற்றவர் விரும்பினால், காப்பி அடித்தவருக்கு எதிராக வழக்கு தொடுக்கலாம். இந்த வகையில் கேஜிஎஃப் திரைப்படத்தின் பாடலை உரிய அனுமதி இந்திய ஒற்றுமை பயணத்துக்காக பயன்படுத்தியதற்கு எதிராக, பெங்களூருவை சேர்ந்த எம்ஆர்வி இசை நிறுவனத்தின் வர்த்தக பங்குதாரரான நவீன்குமார் என்பவர் புகார் தொடுத்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட 3 காங்கிரஸாருக்கு எதிராக இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. புகாரில் மூன்றாவது நபராக ராகுல் காந்தி இணைக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடக பிரிவின் தலைவரான சுப்ரியா ஆகியோர் இதர 2 நபர்கள் ஆவர். காப்பிரைட் மட்டுமன்றி தகவல் தொழில்நுட்பத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழும் வழக்கு பதியப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in